சிஎம் சார் நீதி வேண்டும்.. விஜய்யின் கான்வாய் வாகனத்தை மறிக்க முயன்றவர்களால் பரபரப்பு.. மடக்கி பிடித்த போலீசார்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவைக்கு வரும் வழியில் திடீரென அவரது கார் கான்வாய்க்குள் புகுந்து மனு கொடுக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு, ஆகாஷ் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சிலர் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    Advertisement

    சென்னை மெரினா கடறகரை காமராஜர் சாலையில் முதல்வர் விஜய்யின் கார் கன்வாய் இன்று வந்து கொண்டிருந்தது. முதல்வர் விஜய்யை பார்க்க சாலையின் இருபக்கமும் மக்கள் காத்திருப்பார்கள் என்பதால், விஜய் செல்லும் வழியெங்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பார்கள்.

    Advertisement

    அந்தவகையில் தான் இன்று காமராஜர் சாலையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், திடீரன சாலையின் குறுக்கே ஓடிய சிலர் கான்வாய் வாகனத்தை மறிக்க முயன்றனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து இழுத்து சென்றனர். காரின் குறுக்கே ஓடிவந்ததால், உடனடியாக விஜய்யின் கான்வாய் வாகனங்கள் சில நொடிகள் நிறுத்தப்பட்டன.

    அவருகு பாதுகாப்பு அளித்து வரும் கமோண்டாக்களும் காரை விட்டு இறங்கினர். எனினும், சில நொடிகளுக்கு பிறகு முதல்வர் விஜய் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. கடந்த ஆட்சியின் போது போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். போலீஸ் கஸ்டடியில் இளைஞர் ஆகாஷ் மரணம் அடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி முழக்கம் இட்டபடி, முதல்வரின் காரை இன்று சிலர் முற்றுகையிட முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தால் இன்று காலை அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பதால் இன்றைய விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் வரும் திங்கள் கிழமை பேசுவார். முதல்வரின் துறை மீதான விவாதம் நடைபெற இருந்த நிலையில், இன்று விஜய் வரும் போது காவல் மரணத்திற்கு கேட்டு விஜய் காரை மறிக்க முயன்ற சம்பவம் நடைபெற்றது.

    தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்களில் தாள்தோறும் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து செல்கிறார். நீலாங்கரையில் இருந்து சென்னை தலைமை செயலகம் வரை உள்ள 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    English Summary

    Vijay convoy: A commotion ensued today as Tamil Nadu Chief Minister Vijay was on his way to the Legislative Assembly; individuals breached his car convoy in an attempt to submit a petition and raised slogans demanding justice for Akash's death.