ரூ 100 கோடி மோசடி! அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்கணும்! முன்ஜாமீனுக்கு காவல் துறை எதிர்ப்பு

  • சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க ரூ 100 கோடி பெற்று முறைகேடு செய்ததாக கூற்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்க காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    Advertisement

    திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

    Advertisement

    இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசுத் துறை செயலாளரின் அனுமதியுடன் அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது." என அன்பில் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

    Advertisement

    உடனே குறுக்கிட்ட நீதிபதி, "ஆளுநரின் அதிகாரம் குறித்து திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆட்டுத் தாடியுடன்தானே ஆளுநர் பதவியை திமுக ஒப்பிடும்? ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையற்றது என ஒப்பிட்டு பேசிய அதே நிலையில் தற்போதும் திமுக இருக்கிறதா?

    விசாரணைக்கு தடை விதித்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் - அன்பில் மகேஷ் வழக்கில் போலீஸ் பதில் மனு தாக்கல்

    திமுகவை பொருத்தவரை ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லாததுதானே?" என சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    Advertisement

    இந்த நிலையில் அன்பில் மகேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அன்பிலுக்கு முன்ஜாமீன் தர காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது. "அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் எந்த உண்மையும் வெளிவராது.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரை அன்பில் மகேஷ்தான் பாதுகாக்கிறார்" என காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    English Summary

    Police opposes in Chennai highcourt to grant anticipatory bail for Anbil Mahesh in Rs 100 crore scam case.