சென்னை ராமாபுரம் வீட்டில் கதவை திறந்து நுழைந்த போலீசார்.. இப்படியுமா செய்யுவாங்க.. சிக்கிய 4 பேர்

  • சென்னை: என்ன தான் அரசு கடுமையான சட்டம் போட்டாலும், கள்ள நோட்டு அடிக்கும் கும்பல்கள் அவ்வப்போது உருவாவதும், திட்டங்களை செயல்படுத்த நினைப்பதும் நடக்கிறது. ஆனால் போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக சிக்கி கொள்கிறார்கள். அப்படித்தான் சென்னை ராமாபுரம், கோத்தாரி நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு அச்சடிப்பதற்காக கட்டுக்கட்டாக கருப்பு நிற தாள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது அவர்களை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பிடித்துள்ளனர். பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    சென்னையில் எப்போதாவது சிலர் கள்ள நோட்டு அடித்து மாட்டுவது உண்டு.. அவர்கள் மிக ரகசியமாகவே இயங்குவார்கள்.. ஆனால் போலீசாருக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களால் சிக்கி விடுவார்கள். அப்படித்தான் வளசரவாக்கம் உதவி கமிஷனர் செம்பேடு பாபுவுக்கு கள்ள நோட்டு கும்பல் பற்றி தகவல் வந்துள்ளது. சென்னை ராமாபுரம், கோத்தாரி நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு அச்சடிப்பதற்காக கட்டுக்கட்டாக கருப்பு நிற தாள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் வந்திருக்கிறது. அதன்பேரில் ராமாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குறிப்பிட்ட ஒரு வீட்டில் தீவிரமாக சோதனை நடத்தினார்கள்

    Advertisement

    அந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை தோட்ட வேலை செய்யும் நபர் மட்டும் இருந்திருக்கிறார். போலீசாருக்கு சந்தேகம் அதிகமானது. அவரை அழைத்துச் சென்று, வீட்டில் உள்ள ஒரு அறையை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். . அப்போது, அங்கிருந்த சூட்கேசில் ரூபாய் நோட்டுகள் அளவிலான கருப்பு நிற தாள்கள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையெடுத்து 50-க்கும் மேற்பட்ட கட்டுகளில் இருந்த கருப்பு நிற தாள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வீடு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார். தற்போது அவர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேறு வீட்டில் வசித்து வருவதால் இந்த வீட்டை ஒருவருக்கு குத்தகைக்கு விட்டிருப்பதும் தெரியவந்தது.

    Advertisement

    மேலும், அந்த வீட்டில் குடியிருந்தவர்கள், கடந்த சில மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து, அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கி இருந்த பெண் உட்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கள்ளநோட்டுகள் அச்சடிப்பதற்காக முதல்கட்டமாக ரூபாய் நோட்டுகள் அளவிலான கருப்பு நிற தாள்களை தங்களுக்கு ஒருவர் கொடுத்ததன்பேரில் வாங்கி வந்து வைத்திருந்ததும், கள்ளநோட்டு அச்சடிக்கும் எந்திரம் வந்தவுடன் அதன் மூலம் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடத் திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையெடுத்து, பெண் உட்பட 4 பேரையும் ராமாபுரம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். முழு விவரங்கள் வெளியானால் அந்த கும்பல் பற்றி தெரியவரும்.

    English Summary

    Acting on a tip-off that stacks of black paper were being stockpiled at a house in Kothari Nagar, Ramapuram, Chennai, for the purpose of printing counterfeit currency, the police conducted a surprise raid and apprehended the individuals involved. Four people, including a woman, were arrested.