அம்பை இடைத்தேர்தல்.. அவசரப்பட்டு வேட்பாளராக அறிவித்து கொண்டாரா சீமான்? நாதக திட்டம் என்ன?

  • சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடும் அறிவிப்பை முன் கூட்டியே அறிவித்தது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீமான் போட்டியிடுவது தொடர்பாக முன்பே பலரும அறிந்திருந்தாலும், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் தற்போது வந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை மற்றும் பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் பணிகளை முடித்துவிட்ட சூழலில், உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    திருச்சி கிழக்கு தவிர்த்து மற்ற 4 தொகுதிகளிலும் அதிமுகவில் இருந்து வந்த இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு தான் தவெக வாய்ப்பு கொடுக்க உள்ளது. இதனால் தவெக வேட்பாளர்கள் மீது இயற்கையாகவே மக்களுக்கு ஒரு அதிருப்தி உருவாகும் என்று எதிர்க்கட்சிகள் கணக்கு போட்டுள்ளன.

    ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் இந்த கணக்கு செல்லுபடியானது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் அறிவிப்பே வராத போது, சீமான் முந்திக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் அனைத்து சாதிகளுக்கும், உயிர்களுக்குமான பொது வேட்பாளர் என்று சீமான் தன்னை தானே கூறி கொண்டிருக்கிறார். இதன் மூலமாக திமுக மற்றும் அதிமுக ஆதரவுடன் பொது வேட்பாளராக போட்டியிடும் சீமானின் திட்டமும் கைகூடவில்லை என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீமான் அவசரப்பட்டு தன்னை வேட்பாளராக அறிவித்து கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

    ஏனென்றால் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் இன்னும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இடைத்தேர்தல் பணிளை முன்கூட்டியே நாம் தமிழர் கட்சி தொடங்கும் என்றாலும், அதுவே அவர்களுக்கு பின்னடைவை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தவெக தொடர்ச்சியாக சீமானுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கும் வாய்ப்புகள் அதிகம்.

    Advertisement

    சோசியல் மீடியா மூலமாகவும் சீமானுக்கு எதிராக பிரச்சாரத்தை தவெக தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் கடைசி நேரத்தில் சீமான் போட்டியிடும் அறிவிப்பும் வெளியாகி இருந்தால், மக்கள் அனுதாபத்திலும் கூட வாக்களிக்கலாம் என்று முடிவு எடுத்திருப்பார்கள். ஆனால் அந்த அனுதாபத்தையும் மற்ற கட்சிகள் மாற்ற நாம் தமிழர் கட்சி நேரம் கொடுத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Political Analysts Term Seeman Early Ambasamudram Bypoll Candidacy Announcement a Mistake