பொன்மகன் சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.1,000 சேமித்தால் 15 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? செம வட்டி

  • சென்னை: மகனின் படிப்பு, கல்லூரி செலவு என எதிர்காலத்தில் வரும் பெரிய தேவைகளுக்காக இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோருக்கு அஞ்சலகத்தில் ஒரு நல்ல சேமிப்பு திட்டம் உள்ளது. அதுதான் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம்... கையில் பெரிய தொகை இல்லாவிட்டாலும், சின்ன தொகையில் இருந்து தொடங்கி தொடர்ந்து பணம் சேர்க்கலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கியமான விஷயம்... அதை பற்றி இங்கே பார்ப்போம்.

    Advertisement

    பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கைத் தொடங்கலாம். குழந்தை பிறந்த உடனேயே தொடங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குழந்தைக்கு 10 வயது ஆகும் முன்பு கணக்கைத் தொடங்கினால் போதும். இதனால், மகனின் எதிர்காலத்துக்காக அவர் சிறிய வயதிலேயே சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

    Advertisement

    பொன்மகன் சேமிப்பு திட்டம்

    கணக்கைத் தொடங்கிய பிறகு, பெற்றோர் தங்களால் முடிந்த அளவுக்கு பணத்தைச் செலுத்தலாம். குறைந்தபட்சம் ரூ.500 முதல் பணம் செலுத்த முடியும். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். அதாவது, வசதி இருக்கும் மாதங்களில் அதிகமாகவும், பண நெருக்கடி இருக்கும் நேரங்களில் குறைவாகவும் சேமிக்கும் வகையில் திட்டமிட முடியும்.

    உதாரணமாக, மாதம் ரூ.1,00 என்று தொடர்ந்து சேமித்து வந்தால் 15 ஆண்டுகளில் உங்கள் கையிலிருந்து செலுத்தும் மொத்தத் தொகை ரூ.1.80 லட்சமாக இருக்கும். இதற்கு கிடைக்கும் வட்டியையும் சேர்த்தால், 15 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.3.15 லட்சம் வரை கிடைக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அப்போது நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதத்தைப் பொறுத்து இறுதித் தொகை மாறுபடும்.

    Advertisement

    வட்டி கணக்கீடு எப்படி

    இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.. ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்துபவர்கள் முடிந்தவரை 5-ம் தேதிக்குள் பணத்தை செலுத்துவது நல்லது. அப்படிச் செய்தால் அந்த மாதத்துக்கான வட்டி கணக்கீட்டில் பணம் கூடுதல் நாட்கள் கணக்கில் இருக்கும்.

    இந்த திட்டத்தின் காலம் பொதுவாக 15 ஆண்டுகள். 15 ஆண்டுகள் முடிந்ததும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் சேமிப்பைத் தொடர்ந்து வைத்திருக்க விரும்பினால் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி 5 ஆண்டுகள் கொண்ட காலகட்டங்களில் கணக்கை நீட்டிக்கவும் முடியும். இதனால் குழந்தை கல்லூரிக்குச் செல்லும் காலம் வரை சேமிப்பைத் தொடர முடியும்.

    Advertisement

    நாமினியை எப்போது நியமிக்கலாம்

    "15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டுமா?" என்ற கேள்வியும் பெற்றோருக்கு வரலாம். சில குறிப்பிட்ட தேவைகளுக்காக விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்கூட்டியே பணத்தைப் பெறும் வசதியும் உள்ளது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கணக்கை அடிப்படையாக வைத்து கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது. கணக்குக்கு நாமினியை நியமிக்கலாம். வேறு ஊருக்கு குடிபெயர்ந்தால் கணக்கை வேறு அஞ்சலகத்துக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

    இந்தத் திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? தகுதியான முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்பதாகும். அதாவது, மகனுக்காக சேமிப்பதுடன், வரியிலும் சில நன்மைகளைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

    Advertisement

    அதனால் "மகன் பெரியவனாகும்போது படிப்பு செலவுக்கு பணம் எங்கிருந்து வரும்?" என்று இப்போதே கவலைப்படும் பெற்றோர், சிறிய தொகையில் இருந்தே சேமிப்பைத் தொடங்கலாம். மாதம் ரூ.1,000 என்ற அளவில் தொடங்கினாலும், தொடர்ந்து 15 ஆண்டுகள் சேமித்தால் அது பெரிய தொகையாக மாறும் என்பதுதான் பொன்மகன் திட்டத்தின் அடிப்படை நோக்கம்...!!

    English Summary

    Ponmagan Savings Scheme.. Save ₹1,000 a Month and See How Much You Can Get in 15 Years? High Interest