சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் சேவை பெரிய உதவியாக இருந்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர், வடபழனி பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த புதிய மெட்ரோ வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தற்போது இது தொடர்பான கட்டண விவரமும் வெளியாகி உள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் தங்களின் இலக்கை அடைய மெட்ரோ ரயில் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.. தினமும் வேலை, கல்லூரி, தொழில் என எத்தனையோ காரணங்களுக்காக இந்த பகுதிகளில் இருந்து சென்னையின் மற்ற இடங்களுக்கு சென்று வருபவர்கள் ஏராளம்.
அதனால்தான் பெரிய அளவிலான பொது நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து அசத்தி வருகிறது சமீப நாட்களாகவே, சென்னையில் பூந்தமல்லி, போரூர், வடபழனி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்போவது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கப் போகிறது.. சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-வடபழனி வழித்தடம் அமைய உள்ளது. இந்த சேவை தொடங்கிய பிறகு பூந்தமல்லியில் இருந்து வடபழனி செல்லும் பயண நேரமும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை வழியாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இந்த பயணத்தை மெட்ரோவில் சுமார் 30 நிமிடங்களில் முடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 11-ம் தேதி பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய மெட்ரோ சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகளிடம் அதிகரித்துள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இந்த வழித்தடத்தில் சுமார் 14.64 கிலோமீட்டர் தூரத்துக்கு 11 உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான சோதனை ஓட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சேவை வர உள்ளது. இதையொட்டி இந்த வழித்தடத்துக்கான பயணக் கட்டணத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ வழித்தடம் சுமார் 14.6 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இது சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் பயணிக்கும் தூரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் உள்ளது. பூந்தமல்லியில் இருந்து பூந்தமல்லி ஹைவேஸ் வரை மெட்ரோவில் சென்றால் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்ததாக, பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்வோர் குறைந்த கட்டணத்தில் மெட்ரோவில் பயணம் செய்ய முடியும். அதேபோல் பூந்தமல்லியிவிருந்து அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் மூலைக்கடை, போரூர் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு செல்ல ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும். பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை முழுமையாக பயணம் செய்தால் ரூ.40 கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, இந்த வழித்தடத்தில் எங்கு செல்கிறோம் என்பதைப் பொறுத்து ரூ.10, ரூ.20, ரூ.30, ரூ.40 என கட்டணம் மாறுகிறது. புதிய மெட்ரோ வழித்தடம் குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பகுதிகளில் இருந்து வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு சாலை வழியாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக பயண நேரம் அதிகமாகும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் டிராபிக் அதிகமாக இருக்கும். ஆனால், மெட்ரோ சேவை தொடங்கிய பிறகு இந்த சிரமம் ஓரளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தினமும் வேலைக்காகவும், கல்லூரிக்காகவும் இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் மக்கள், தங்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.40 வரையிலான கட்டணத்தில் பயணம் செய்ய முடிவதால், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இந்த புதிய மெட்ரோ சேவை மேற்கு சென்னை மக்களுக்கு முக்கியமான போக்குவரத்து வசதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!!சென்னை மெட்ரோ
பூந்தமல்லி-வடபழனி வழித்தடம்
வழித்தடத்துக்கான பயணக் கட்டணம்
ரூ.10 முதல் 40 வரை கட்டணம்