சொன்னதை செய்திருக்கிறார் விஜய்! முதல்வரை பாராட்டி முக்கிய கோரிக்கையை வைத்த பூவுலகின் நண்பர்கள்

  • சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படமாட்டாது என்று முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் தொடர்பான முக்கிய கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

    Advertisement

    இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது x பக்கத்தில், "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான பணிகள் கைவிடப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    முக்கிய கோரிக்கை

    தேர்தலுக்கு முந்தைய தனது நிலைப்பாட்டில் முதல்வர் தனது உறுதிப்பாட்டைக் காத்துள்ளார். விவசாயிகளுக்கு மட்டுமின்றி சென்னையின் வெள்ள பாதிப்பையும் அதிகரிக்கும் இத்திட்டத்திற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம்முடிவை அறிவித்த முதலமைச்சருக்ககு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என வலியுறுத்தியுள்ளது.

    முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு

    சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சி.ஜோசப் விஜய், "சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். விவசாயிகளே நான்டின் முதுகெலும்பு. விவசாய நிலங்களை பாதுகாக்க மக்கள் போராடி வருகிறார்கள். அதன்படி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் கைவிடப்படும். புதிய விமான நிலைய திட்டத்திற்கான நிலம் விரைவில் தேர்வு செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    திமுக எதிர்ப்பு

    ஆயிரம் காரணம் சொன்னாலும்.. பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக கொந்தளித்திருக்கிறது. பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும். பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

    இப்படி இருக்கையில் முதலமைச்சரின் அறிவிப்புக்கு சூழலியல் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Chief Minister Vijay has announced in the Legislative Assembly that a new airport will not be constructed at Parandur. Welcoming this announcement, the environmental organization 'Poovulagin Nanbargal' has put forward a key demand concerning the farmers.