சென்னை: முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர்கள் 4 பேருக்கும் தனித்தனியே துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் யாருக்கு எந்த துறை என்பதை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் அரசு பதவியேற்று 8 நாட்கள் ஆகின்றன. முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலாளராக செந்தில் குமார் ஐஏஎஸ், செயலாளர் 2வதாக லட்சுமி பிரியா, செயாளர் - 3 வதாக அண்ணா துரை, கூடுதல் செயலாளராக விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 பேருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் யாருக்கு எந்த துறை என்பதை பார்க்கலாம். நிதித் துறை, உள்துறை, கலால், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், ஆற்றல், தொழிற்சாலைகள், முதலீடு, பொருளாதாரம், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலன், லஞ்ச ஒழிப்பு ஆகிய 10 துறைகள் ஆகும். முதல்வர் அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், முதல்வரின் சுற்றுப்பயணம், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ், வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை, சமூகநலன், பெண்கள் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலம், ஆதிதிராவிடர், பழங்குடியின துறை, மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகிய 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இயற்கை வளங்கள், நீர் வளம், வேளாண்மை, விவசாயிகள் நலன், கால்நடைத் துறை, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தம், கைத்தறி, கைவினை, ஜவுளி, காதி, போக்குவரத்து துறை, சட்டம், சட்டசபை செயலகம், மனிதவள மேம்பாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை ஆகிய 12 துறைள் கொடுக்கப்பட்டுள்ளன. வணிக வரி, பதிவுத் துறை, சுற்றுலா, கலாச்சாரம், அறநிலையத் துறை, சிறு குறு நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, தொழிலாளர் நலன், திறன் வளர்ச்சி, திட்டம் மற்றும் வளர்ச்சி, சிறப்பு செயலாக்கம், சிறப்பு முயற்சிகள் துறை ஆகிய 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.செந்தில் குமார் ஐஏஎஸ்
லட்சுமிபிரியா ஐஏஎஸ்
அண்ணாதுரை
விஷ்ணு ஐஏஎஸ்