சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார். அதிமுக மீது அந்த கட்சியின் தொண்டர்கள் நம்பிக்கையை இழுந்துள்ளார்கள்.. குறிப்பாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதி போன்ற அதிமுக கோலோச்சிய தொகுதியில் கூட மிகப்பெரிய பின்னடைவை அதிமுக சந்தித்து இருப்பதால் அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு வர வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, கரூர் சி விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி விஜயபாஸ்கர், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை உள்பட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். கையில் வைத்த மை கூட காயாத நிலையில் அவர்கள் கட்சி மாறியது, தவெகவினர் அப்பட்டமான குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத தவெகவினர், மேலும் சில அதிமுக எம்.எல்.ஏக்களும் தவெகவிற்கு வருவார்கள் என்று பேசி வந்தனர். இது ஒருபுறம் இருக்க தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. இதனால் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்தது. அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூட மேலும் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு வரலாம் என பட்டும்படாமல் பேசினர். அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதாலும், அக்கட்சியின் தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே இது மாதிரியான பேச்சுக்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அமைச்சர் ஷாஜகானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது:- "தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என அவர் சொன்ன பிறகு, எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்காலம் குறித்து கேள்விக்குறியோடு பயணிப்பதால் பல்வேறு சட்டமன்றம் உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் இணைவதற்கு தயாராக உள்ளார்கள் என்ற செய்தி பலர் மூலம் வந்துகொண்டு தான் இருக்கிறது. ஏன் என்று சொன்னால் அதிமுக மீது அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையை இழுந்துள்ளார்கள். குறிப்பாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதி போன்ற அதிமுக கோலோச்சிய தொகுதியில் கூட மிகப்பெரிய பின்னடைவை அதிமுக சந்தித்து இருப்பதால் அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது ஜனநாயகம், சட்டமரபுப்படி, அவர்களுக்கான உரிமைப்படி பதவி விலகியும், ராஜினாமா செய்தோ அவர்கள் விருப்பப்படி செய்வார்கள்.. என்றார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற போது தவெகவில் 107 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்.எல், இடதுசாரிகளான சிபிஎம், சிபிஐ கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. முதல்வர் விஜய்யின் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட போது, அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி ஆக்ஷன் எடுத்த நிலையில் 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். அப்போதில் இருந்தே தவெகவுக்கு மேலும் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் வரப்போகிறார்கள் என செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூறி வந்தனர். தவெகவும் ஒருபுறம் கூட்டணி கட்சிகளின் சப்போர்ட்டை எதிர்பார்க்காமல் தனித்து பெரும்பான்பையை பெற இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில் தான் செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ஷாஜகானும் இவ்வாறு பதிலளித்துள்ளார்.இடைத்தேர்தலில் வெற்றி
அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வரலாம்
பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்!
பெரும்பான்மையை நோக்கி தவெக
ரூ.300 கோடி மெத் கடத்தல்.. தவெக தலையின் Breaking BAD! விழி பிதுங்கி நிற்கும் விஜய்! மெளனம் ஏன்?