ப்ரோக்கருக்கு என்ன வேலை.. கண்கள் சிவந்த விஜய்.. டெண்டர் முறைகேட்டில் சிக்கிய அதிகாரிகள் மாற்றம்!

  • சென்னை: தமிழக நிர்வாகத்தின் அதிகார மையமான புனித ஜார்ஜ் கோட்டையில் சமீபகாலமாக அரங்கேறிய அதிரடி நிகழ்வுகள் ஒட்டுமொத்த அதிகாரிகளுக்கும் அரசு இயந்திரத்திற்கும் ஒரு வலுவான எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளன. விஜய் எடுத்த ஆக்சன் ஒன்று அதிகாரிகள் இடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாம்... அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    சென்னை அசோக் நகரில் கட்டப்பட்டு வரும் 22 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், குடியிருப்புகளுக்கான பெயர் பலகைகள் பொருத்துவதற்காக ₹33 லட்சம் மதிப்பிலான டெண்டர் ஒன்றை வீட்டு வசதி வாரியம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியிட்டது. அரசு விதிகளின்படி, இத்தகைய முக்கிய பொதுப் பணிகளுக்கு வெளிப்படையான முறையில் ஒப்பந்ததாரர்கள் போட்டியிட போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

    Advertisement

    ஆனால், இந்த குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் மிகக் குறுகிய கால அளவாக வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டு, ஆகஸ்ட் 20-ஆம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வழக்கமான அரசு ஒப்பந்ததாரர்கள் பலர், கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி அதிகாரிகளை நேரில் அணுகினர். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அலட்சியமாக நிராகரிக்கப்பட்டன. இதற்கு காரணாம் ஒரு ப்ரோக்கர் என்கிறார்கள்.

    மேலும், குறிப்பிட்ட உயர் அதிகாரி ஒருவர் ஒப்பந்ததாரர்களிடம் பேசும்போது, "இந்த டெண்டர் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்த உரையாடலின் ஆடியோ பதிவு ரகசியமாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. அதிகாரிகளின் அப்பட்டமான ஒருதலைப்பட்ச போக்கையும் ஊழலையும் அம்பலப்படுத்திய இந்த ஆடியோ, பொதுமக்களிடையேயும் ஒப்பந்ததாரர் சங்கங்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    அதிரடி விசாரணை மற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    ஆடியோ ஆதாரம் வெளியாகி சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததால், வேறு வழியின்றி வீட்டு வசதி வாரியம் உடனடியாக அந்த ₹33 லட்சம் மதிப்பிலான டெண்டரை நிர்வாகக் காரணங்களை சுட்டிக்காட்டி ரத்து செய்தது. எனினும், விவகாரம் அத்துடன் முடிந்துவிடவில்லை.

    வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் இந்த விவகாரத்தில் விரிவான துறைசார் விசாரணையைத் தொடங்கினார். முறைகேட்டில் தொடர்புடைய கண்காணிப்புப் பொறியாளர் (மற்றும் தலைமைப் பொறியாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் கசிந்த ஆடியோவில் உள்ளபடி, தங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட நபருக்கு ஒப்பந்தத்தை தாரைவார்க்கும் நோக்கில் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டது விசாரணையில் உறுதியானது. முறைகேடு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தவறிழைத்த அதிகாரிகள் உடனடியாக முக்கியப் பொறுப்புகளில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    Advertisement

    அரசியல் தரகருக்கு விழுந்த சம்மட்டி அடி

    டெண்டர் முறைகேடு விசாரணையின் தொடர்ச்சியாக, தலைமைச் செயலகத்தில் நிழல் அதிகாரமாக செயல்பட்டு வந்த இடைத்தரகர்கள் மீதான நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டது. இதன் முக்கியப் புள்ளியாக, நீண்டகாலமாக அதிகார மையங்களைச் சுற்றி வலம் வந்த ப்ரோக்கர் ஒருவர் மீதும் மீது கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    முன்னதாக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒரு அரசுப் பதவியை இழந்த அந்த ப்ரோக்கர், பின்னர் வேறு துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அரசின் தலைமை இடத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பல்வேறு துறைகளில் அதிகாரத் தலையீடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, அவர் வகித்து வந்த பதவியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் நுழைய அவருக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசுத் துறைகளில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தை வளைக்க முயலும் இடைத்தரகர்களுக்கு இடமில்லை என்பதை இந்த அதிரடி நடவடிக்கைகள் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளன.

    English Summary

    Power Brokers stopped, Key Officials Transferred Over Rigged Housing Board Tender by Vijay