வன்னியரசுக்கு இது தேவைதான்! தவெக கூட சேர்ந்ததுக்கு இன்னமும் அனுபவிக்கனும் போல! வெடிக்கும் விமர்சனம்

  • சென்னை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பங்கேற்றிருந்த கூட்டத்தில் திடீரென கரண்ட் கட் ஆகியிருக்கிறது. ஏற்கெனவே பவர் கட் பிரச்சனையால் தவெக ஆட்சியாளர்கள் விமர்சனங்களை எதிர்க்கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் தவெக செய்யும் தவறுக்கு விசிக வன்னி அரசையும் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர்.

    Advertisement

    திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பாங்களத்தூர், பனையூர் ஆகிய பகுதிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விசிகவின் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பங்கேற்றிருந்தார்.

    Advertisement

    நிகழ்ச்சி சிறப்பாகவே தொடங்கியது. வன்னி அரசுக்கு மாலை, பொன்னாடை எல்லாம் போர்த்தி தட புடலாக வரவேற்பு இருந்தது. அப்புறம் என்ன? மைக்கை பிடித்த வன்னி அரசு தவெக ஆட்சி குறித்து ஆஹா! ஓஹோ என பேசினார். கடைசியில் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அமைச்சர் பட்டா கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில்.. யாரோ டிரான்ஸ்பார்மரில் கை வைத்திருப்பார்கள் போல.. சட்டென பவர் கட்! வன்னி அரசு முகம் அப்படியே அதிர்ச்சியில் இருண்டுவிட்டது.

    இதெல்லாம் வழக்கமா நடக்குறதுதான். முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஆய்வு மேற்கொண்ட அடுத்த நாளே அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் டப்பு டப்பு என மின்வெட்டு ஏற்பட்டிருந்தது. துறை சார்ந்த அமைச்சர் நிர்மல் குமார், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் இதே கதைதான்.

    Advertisement
    Dharapuram: வாக்குச்சாவடியில் திடீர் மின்வெட்டு.. செல்போன் வெளிச்சத்தில் வாக்களித்த வாக்காளர்கள்!

    இப்படி இருக்கும்போது வன்னி அரசு பங்கேற்ற நிகழ்ச்சியில் பவர் கட் கடந்து போக வேண்டிய விஷயம்தான். ஆனால் அதுதான் நடக்கவில்லை. அமைச்சரவையில் பங்கேற்ற விசிக கூட பவர் கட் பற்றி கறாராக பேசவில்லை.. அதனால்தான் வன்னி அரசு நிகழ்ச்சியிலும் கரண்ட் கட் ஆகியிருக்கிறது என்று நெட்டிசன்கள் வன்னி அரசக்கு எதிராக பேச தொடங்கிவிட்டனர். 'சேராத இடம் சேர்ந்து..' என்கிற கதையாக வன்னி அரசு மீது விமர்சனங்கள் அடுக்கப்பட்டன.

    மின்வெட்டு பேட்டன்

    வழக்கமாக சம்மர் சீசனில்தான் பவர் கட் இருக்கும். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் மின்வெட்டு தொடர்கிறது. இதனால் தவெக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

    Advertisement

    தமிழகத்தை பொறுத்தவரை மின்வெட்டுக்கு ஒரு பேட்டன் இருக்கிறது. சென்னையில் அவ்வளவு சீக்கிரத்தில் பவர் கட் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது அறிவிக்கப்பட்ட மின்வெட்டாகத்தான் இருக்கும். அறிவிக்கப்படாத பவர் கட் எனில், 30 நிமிடத்திற்கெல்லாம் அது சரி செய்யப்படும். பெரும்பாலும் மாவட்ட தலைநகரங்களில் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், எப்போது ஆட்சி மாறியதோ.. அப்போதே காட்சியும் மாறிவிட்டது.

    பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! சமூகநீதி வன்னியரசு மௌனம் ஏன்? ஒரு வார்த்தை கூட பேசலையே

    சென்னையில் மின்வெட்டுக்கு எதிராக மக்கள் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இதே நிலைமைதான். இது எப்போது சரி செய்யப்படும்? விசிக ஏன் இது பற்றி கறாராக பேசவில்லை? கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில்தான் இருக்கின்றன. ஆனாலும் அக்கட்சியினர் கறாராகத்தானே பேசுகிறார்கள்? அதே போல திருமாவளவன் பேச வேண்டும். எப்படியாவது மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Vanni Arasu: A sudden power outage occurred during a meeting attended by Vanni Arasu, the Minister for Social Justice. The TVK administration is already facing criticism over power supply issues; amidst this, netizens have begun criticizing VCK’s Vanni Arasu as well for the errors committed by TVK.