சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.. தி நகர் முதல் திருவேற்காடு வரை

  • சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை பகுதிகளான தி.நகர், கே.கே.நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம், திருவேற்காடு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும். பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னையில் 26.05.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    Advertisement

    தி.நகர்: பஜுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமுலை அம்மான் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, ராமச்சந்திர ஐயர் தெரு, ராஜபிள்ளை தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, ரங்கராஜபுரம், அஜீஸ் நகர், அக்பராபாத், பராங்குசபுரம், சிஆர்பி கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை, பாரதி தெரு, திலக் தெரு.

    தசரதபுரம்: காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், வெங்கடேச நகர், அருணாசலம் சாலை.

    Advertisement

    சாலிகிராமம் : குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை.

    கே.கே. நகர்: பரணி காலனி, காவேரி மருத்துவமனை, சூரியா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம்.

    விருகம்பாக்கம்: ஆற்காடு சாலை, என்.எஸ்.கே. லேன், ஷியாமளா டவர்.

    சின்மயா நகர்: முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை.

    திருவேற்காடு: ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், விஜிஎன், அன்பு நகர்.

    ஐயப்பன்தாங்கல்: மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ நகர், அம்மன் நகர், பி.ஜி அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மன் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக மக்கள் இப்போது அதிக அளவில் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்கள். கோடைக்காலம் என்பதால் உச்சபட்ச மின்சார தேவை ஏற்பட்டுள்ளது. அந்த மின்சார தேவையை சமாளிக்கும் அளவிற்கு மின் கட்டமைப்புகள் எல்லா இடங்களிலும் இல்லை.. அதனால் அடிக்கடி மின்வயர்கள் பழுதாகி பவர் கட் ஏற்படுகிறது. அதேபோல் போதிய அளவு மின்சாரம் கிடைக்காத காரணத்தால், அதாவது குறைந்த மின் அழுத்தம் காரணமாகவும் சில பகுதிகளில் மின்சாரம் கட்டாகி வந்தது. இதனால் மக்கள் அடிக்கடி தெருவில் இறங்கி போராடவும் செய்தார்கள்.

    English Summary

    Power cut : Due to maintenance work, power supply will be suspended from 9:00 AM to 2:00 PM in various areas of Chennai, including T. Nagar, K.K. Nagar, Saligramam, Virugambakkam, Thiruverkadu, and Iyyappanthangal. Power supply will be restored once the maintenance work is completed.