சென்னை: சென்னை ராயபுரத்தில் நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிகாரிகளுக்கு போன் செய்து பேசியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து மின்வெட்டு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.
நேற்றிரவு ராயபுரத்தில் திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதனைக்கும் நேற்று சென்னையில் மழை இல்லை. ஆனாலும் திடீரென பவர் கட் ஆகியிருக்கிறது. வயதானவர்கள், நோயாளிகள், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மின்வெட்டு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவது இது முதல்முறை கிடையாது. எனவே டென்ஷனான முனிராம் பாண்டியன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிகாரிகளுக்கு போன் போட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மின்சார பற்றாக்குறை மின்வெட்டுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தாலும், மின்சாரத்துறையை சீரமைக்காதது அதைவிட மிக முக்கியமான காரணமாகும். பருவமழை தொடங்குகிறது எனில் முன்னெச்சரிக்கையாக மின்கம்பிகளை சீரமைப்பது, புதிய கம்பங்களை நடுவது, மின் கம்பிகளுக்கு குறுக்கே போகும் மரக்கிளைகளை வெட்டுவது என பல்வேறு பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ளும். இந்த பணிகளை செய்ய ஆட்கள் தேவை. மின்வாரியத்தில் போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லாததால், சிறிய பிரச்சனையை சரி செய்யவே பல மணி நேரம் ஆவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். 40 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 4-5 பேர் மட்டுமே வேலை செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும், மின்சாரத்துறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் அரசு சொல்லியிருந்த கருத்துக்களுக்கும், பின்னர் சட்டமன்றத்தில் துறை சார்ந்த அமைச்சர் பேசிய கருத்துகளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருப்பதாக மின்சார வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர். புதியதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். காண்ட்ராக்ட் அடிப்படையில் இல்லாமல் நிரந்தர ஊழியர்களாக எடுக்கப்பட்டால்தான் வேலையின் தரமும் அதற்கேற்ப இருக்கும். ஆனால் அரசு அதை செய்ய தயாராக இல்லை என்பதால், மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.ரோட்டுக்கு வந்த மக்கள்
மின்வெட்டும் அதற்கான காரணமும்
ஊழியர்கள் பற்றாக்குறை