Praggnanandhaa: நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை வாழ்த்திய முதல்வர் விஜய்.. ரூ.50 லட்சம் பரிசு

  • சென்னை: புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை இன்று சந்தித்த இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.

    Advertisement

    மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சன், வின்சென்ட் கெய்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

    Advertisement

    மேலும், போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்து கவனம் ஈர்த்தார்.

    இந்த மகத்தான சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை இன்று சந்தித்த இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது வாழ்த்துகளைப் பெற்றார். முதல்வர் விஜய் மற்றும் பிரக்ஞானந்தா இணைந்து செஸ் விளையாடினர். வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ. 50 லட்சத்தை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார்.

    English Summary

    praggnanandhaa: Indian chess grandmaster Praggnanandhaa has created history by winning the prestigious Norway Chess Tournament. Following this remarkable achievement, Praggnanandhaa met Tamil Nadu Chief Minister Vijay at the Secretariat in Chennai and received his congratulations.