சென்னை: ''நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். எனக்கு கோவில்களுக்கு செல்ல பிடிக்கும். என் கணவர் பிரகாஷ் ராஜ்க்கு நாத்திகர் (கடவுள் நம்பிக்கை கிடையாது). ஆனால் கோவிலுக்கு செல்ல உதவி செய்வார்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் மனைவி பெயர் போனி வர்மா. இவர் நடன இயக்குநர். பிரகாஷ் ராஜ் தனது முதல் மனைவி லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு போனி வர்மாவை கடந்த 2010ம் ஆண்டில் கரம்பிடித்தார்.
இந்நிலையில் தன் நடிகர் பிரகாஷ் ராஜ் பற்றிய சில முக்கிய கருத்துகளை போனி வர்மா பகிர்ந்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ''பிரகாஷை (பிரகாஷ் ராஜ்) விட 12 வயது குறைந்தவள். இதனால் என்னுடைய திருமணத்தை கூட சில நண்பர்கள் விரும்பவில்லை. அதிருப்தி அடைந்தனர். ஆனால் இப்படி ஒரு நபரை திருமணம் செய்ததை நினைத்து நான் ஹேப்பியாக இருக்கிறேன். பூஜா, மேக்னா (பிரகாஷ் ராஜ் முதல் மனைவியின் மகள்) ஆகியோர் இப்போது அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்கள். எங்களின் திருமணத்தின்போது கூட அவர்கள் பங்கேற்றனர். திருமணத்தின்போது எனக்கு மெஹந்தி வைத்தனர். எங்களுக்கு இடையே நல்ல உறவு உள்ளது'' என்றார். அதேபோல் மதம் மற்றும் ஆன்மீகம் போன்ற விஷயங்களில் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா இடையே உள்ள வேறுபாடு பற்றியும் இந்த பேட்டியில் விளக்கிறார். இதுபற்றி போனி வர்மா கூறுகையில், ''உண்மையில் நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். கடவுளுக்கு பயந்து நடப்பேன். கோவில்களுக்குச் செல்வது மிகவும் பிடிக்கும். ஆனால் எனது கணவர் நாத்திகராக இருக்கிறார். இருவருக்கும் இடையே இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் பிரகாஷ் ராஜ் எப்போதும் எனது மத நம்பிக்கைகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார். கோவில்களில் தரிசனம் செய்ய உதவுகிறார். அதே சமயம், மதம் என்பது ஒரு தனிப்பட்ட விருப்பமாகவே இருக்க வேண்டும் என்றும், அதை ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் உறுதியாக இருக்கிறார். இந்த விஷயத்தில் அவரது கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். பிரகாஷ் தாயார் இருந்தபோது அவர் இயேசுவை நம்பினார். நான் வீட்டின் மற்றொரு பகுதியில் விநாயகரை வழிபட்டேன். எங்கள் வீட்டில் இது தொடர்பாக ஒருமுறை கூட எந்த பிரச்சினையும் எழுந்ததில்லை. தீபாவளியும் கிறிஸ்துமஸும் எங்கள் வீட்டில் ஒரே மாதிரியான உற்சாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது'' என்றார். நடிகர் பிரகாஷ் ராஜ் தந்தை பெயர் மஞ்சுநாத் ராய். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். சமீபத்தில் மறைந்த அவரது தாய் ஸ்வர்ணலதா ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர் ஆவார். பிரகாஷ் ராஜ் நாத்திகராக இருக்கும் நிலையில் அவரது மனைவி போனி வர்மா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதோடு கோவில்களுக்கும் செல்லும் வழக்கம் கொண்டவர். நடிகர் பிரகாஷ் ராஜ் முதலில் நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 1994ம் ஆண்டு நடந்தது. இந்த தம்பதிக்கு மேக்னா, பூஜா என்ற 2 மகள்கள் உள்ளனர். சித்து என்ற மகன் 2004ம் ஆண்டில் இறந்தார். பிரகாஷ் ராஜ் - லலிதா குமார் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும்விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு பிரகாஷ் ராஜ், போனி வர்மாவை 2வது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த 2016ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் வேதாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டாம்.. பாஜகவை எதிர்ப்பதால் நழுவும் திரைப்பட வாய்ப்புகள் – மனைவி போனி வர்மா