3,000 ஆண்டுகளாக இந்தியா மாதிரி அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை - பிரகாஷ் ராஜ்

  • சென்னை: ''அரசியலமைப்பை திருத்தணும்னு இருக்காங்களே திருட்டு பசங்க.. இவங்க மூன்றாயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். இந்த திருட்டு பசங்க சொல்வாங்க எங்களுடைய நாடு அற்புதமாக இருந்தது. பொன் இருந்தது என்று பொய்யாக சொல்வார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் வருடங்களாக இந்தியா மாதிரியான அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை. அதில் இருந்து தப்பிப்பதற்காக தான் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

    Advertisement

    சென்னையில் இன்று அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மனிதநேய மக்கள் க்டசியின் தவைர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Advertisement

    இந்த மாநட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு பாஜக மற்றும் பிரதமர் மோடியின பெயரை கூறாமல் கடுமையாக ஒருமையில் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:

    ''அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் பிரிட்டிஷ் விட்டு சென்ற பிறகு பிறந்த இந்தியாவுக்கானது இல்லை. இந்த அரசியலமைப்பை திருத்தணும்னு இருக்காங்களே திருட்டு பசங்க.. இவங்க மூன்றாயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த திருட்டு பசங்க மீண்டும் வந்துவிடக்கூடாது என்று எழுதிய அரசியலமைப்பு சட்டம் இது.

    இந்த திருட்டு பசங்க சொல்வாங்க எங்களுடைய நாடு அற்புதமாக இருந்தது. பொன் இருந்தது என்று பொய்யாக சொல்வார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் வருடங்களாக இந்தியா மாதிரியான அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை. இவனை தொடக்கூடாது. இவனுக்கு உரிமையில்லை. குழந்தை திருமணம் அசிங்கமாக இருந்த நாடு. சில மன்னர்கள், பணக்காரர்கள் நிம்மதியாக இருந்தார்களே தவிர சராசரி மனிதன் ரொம்ப கஷ்டமாக வாழ்ந்த கலாசாரம். அதில் இருந்து தப்பிப்பதற்காக தான் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார்.

    Advertisement

    தவளையை கொதிக்கும் தண்ணீரில் போட்டால் வெளியே போய்விடும். ஆனால் திருட்டு பசங்க என்ன செய்து இருக்கிறார்கள் என்றால் ஜில்லுனு இருக்கும் பாத்திரத்தில் தவளை விட்டு அடியில் நெருப்பு வைத்திருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டு ஆட்சியில் சூடானதே தெரியாது. இப்போது தள்ளும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறார்கள். இதில் சந்தோஷம் என்னவென்றால் அவர்கள் போகும் நேரம் வந்துவிட்டது. இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இளைஞர்கள் அவர்களை கீழே தள்ளுவார்கள்.

    இப்போது ரீல்ஸ் பண்றாரு ஒரு சார். ராஜினாமா செய்றாங்க. இளைஞர்களை நம்பாதீங்கனு நீங்கள் சொல்றீங்க.. ஆனால் நான் இந்த இளைஞர்களை நம்புகிறேன். ஏனென்றால் அவன் இன்னொரு அரசியல்வாதி இல்லை. கடைசியாக ஒன்றை சொல்கிறேன். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை ஒழுங்காக நீங்கள் படித்தால் தெரியும். இந்தியாவில் அரசியல் செய்ய வேண்டியது மக்கள் தான். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அரசியல் பண்றாங்க.. நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இதை மாற்ற வேண்டும்.

    Advertisement

    இதற்காக நாம் யாரும் அரசியல்வாதியக வேண்டிய அவசியம் இல்லை. அரசியல்கட்சியாக வேண்டிய அவசியம் இலலை. குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவனை கேள்வி கேட்க மக்கள் இருக்கிறார்கள். வேலை செய்யாவிட்டால் பதவியில் இருந்து இறக்குவார்கள் என்ற பயத்தை உருவாக்கினால் போதும். இதுதான் நாம் செய்ய வேண்டியது. அதனை தான் இப்போது இளைஞர்கள் செய்துள்ளனர்.

    ஆனால் ஒன்று, இந்த காலக்கட்டத்தில் யோசிக்க வேண்டியது பாஜக, பாசிஸ்ட் மன்னர் இன்னும் 3 ஆண்டில் இறங்குவார். இந்திய அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளும்கட்சி தான் கீழே வரும். ஆளும் கட்சியை மக்கள் கீழே தள்ளுவாங்க. அவவனை வெறுப்பில் கீழே இறக்குகிறோமே தவிர அடுத்தவனை சிந்தித்து தேர்ந்தெடுக்கவில்லை. இது நடக்க 15 ஆண்டுகள் ஆகும். இன்றைய தலைமுறை யோசித்து கொண்டிருக்கிறது. அவர்களை வலுவாக்க அரசியல் அறிவை வளர்க்க இனனொரு 10 முதல் 15 ஆண்டு வேலைப்பார்க்க வேண்டி உள்ளது. கேன்சர் அசிங்கமான வியாதி. இதனை முதலில் இறக்கவிட்டு மற்ற வியாதிகளையும் சரிசெய்வோம்'' என்றார்.

    English Summary

    Actor Prakash Raj says that, "These scoundrels want to amend the Constitution... They have been around for three thousand years. These scoundrels falsely claim that our country was once magnificent and filled with gold. Yet, for two or three thousand years, the world has never seen a culture as repulsive as India's. 'Don't touch this person; that person has no rights Ambedkar drafted the Constitution precisely to help us escape that reality" .