ஓடும் ரயிலில் அலறிய 20 வயது கர்ப்பிணி.. அட்டூழியம் செய்த ஆசாமி.. பாய்ந்து காப்பாற்றிய ரயில் மதத்

  • சென்னை: டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தை நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயில்... அதில் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகத்தையே உலுக்கிப்போட்டுள்ளது... இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்ட போதிலும், நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவேயில்லை. என்ன நடந்தது?

    Advertisement

    மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் கால்சினி பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய பழங்குடியினப் பெண் ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார். இவர் டெல்லியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காக பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.

    Advertisement

    மாற்றுத்திறனாளி பெட்டியில் கர்ப்பிணி

    கர்ப்பிணியாக இருந்ததால், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஸ்பெஷல் பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. அந்த பெட்டியில் சில பயணிகள் இருந்ததால், தைரியமாக பயணம் மேற்கொண்டார். ஆனால், நேரம் ஆக ஆக, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பயணிகள் இறங்கிவிட்டனர்.

    ரயில் ஹசிமாரா ரயில் நிலையத்தை கடந்து இரவு 8.30 மணியளவில் காரோபாரா மற்றும் கால்சினி பகுதிகளை நோக்கி சென்றது. அந்த நேரத்தில் அப்பெட்டியில், கர்ப்பிணிப் பெண் மட்டுமே தனியாக இருந்துள்ளார்...

    இதனை அதே ரயிலில் பயணித்த அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டம் ரங்கியா பகுதியைச் சேர்ந்த 30 வயதான கவுதம் மகதோ என்பவர் நோட்டமிட்டுள்ளார்.. சிலிகுரி ஜங்ஷனில் ரயிலில் ஏறிய இந்த நபர், மாற்றுத்திறனாளிகள் பெட்டி காலியாக இருப்பதை பார்த்து, உள்ளே நுழைந்து விட்டார்.

    Advertisement

    கை கொடுத்த ரயில் மதத்

    பெட்டிக்குள் தனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணை கவுதம் மகதோ கொடூரமாக தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இதனால் ஓடும் ரயில் சத்தத்திலும், அந்த பெண் அலறி கத்தி கூச்சலிட்டார்.. பக்கத்து பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த ரயில்வே மின்சாரப் பிரிவு ஊழியர்களின் காதுகளில் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் விழுந்தது.. விபரீதத்தை அறிந்ததுமே, ரயில்வேயின் அவசர உதவி அமைப்பான "ரயில் மதத்" மூலம் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னார்கள்.

    அதேபோல கர்ப்பிணியும் தன்னுடைய கணவரை செல்போனில் தொடர்புகொண்டு சொல்லி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக அலிப்பூர்துவார் ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்து வந்தார்.. அதற்குள் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே போலீசார் அலிப்பூர்துவார் ஜங்ஷனுக்கு திரண்டு வந்து காத்திருந்தார்கள்.

    Advertisement

    5 நாள் போலீஸ் காவல்

    இரவு 9.20 மணிக்கு ரயில் அலிப்பூர்துவார் ஸ்டேஷன் வந்து நின்றதும், பாதுகாப்புப் படையினர் ரயிலை சுற்றி வளைத்து, தப்பியோட முயன்ற கவுதம் மகதோவை கைது செய்னர்.. வழக்குப்பதிவு செய்து, ஜெயிலும் தள்ளியுள்ளனர்.. குற்றவாளிக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் அலிப்பூர்துவார் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். ரயில்வே ஊழியர்களின் சுதாரிப்பும், "ரயில் மதத்" டெக்னாலஜியும் இணைந்து செயல்பட்டதால், குற்றவாளி சட்டத்தின் பிடியில் உடனடியாக சிக்கியுள்ளார்.. இந்த குற்றவாளி கவுதம் மகதோ யார் தெரியுமா? அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வாழ்வாதாரத்தை இழந்து, குப்பை பொறுக்கும் தொழில் செய்து வருபவராம்..!!

    English Summary

    Pregnant Woman Assaulted on Moving Express Train.. Rail Madad App Triggers Midnight Arrest