லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்.. அமல்ராஜுக்கு கூடுதல் பொறுப்பு!

  • சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ் கடந்த ஜூலை மாதம் காவலர் பயிற்சி மைய இயக்குநராக மாற்றப்பட்டார்.

    Advertisement

    அதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மகேஸ்வரி ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

    இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    விரைவில், தாம்பரம் காவல் ஆணையர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Prem Anand Sinha has been appointed as the Director of DVAC. Following his transfer from the post of Tambaram Police Commissioner, the Tamil Nadu government has ordered that Chennai Police Commissioner Amalraj will hold additional charge as the Tambaram Police Commissioner.