வேளான் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை.. பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செஞ்சிருகாங்க.. பிரேமலதா

  • சென்னை: தவெக அரசு தாக்கல் செய்த வேளான் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவிலை, நெல் சேமிப்புக்கிடங்குகள் தொடர்பாக அறிவிப்பு இல்லை, பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடு பற்றியும் வேளாண் துறை அமைச்சர் வெளியிட்டார்.

    Advertisement

    வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி மைனஸ் ஜீரோ மதிப்பெண் தான் கொடுக்க முடியும். எந்த ஒரு அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை என கூறியிருந்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் இல்லை. கருவேல மரங்களை அகற்ற வேண்டும். வேளாண் துறை சார்ந்த தொழிற்சாலைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் இல்லை. வித்தியாசமான பட்ஜெட்டாக இதை பார்க்கவில்லை.

    Advertisement

    கருவேல மரங்கள் உள்ள நிலத்தை சீர்படுத்த வேண்டும். செய்தி தாளை வாசிப்பது போல வேளாண் பட்ஜெட்டை அமைசச்ர் வாசித்து இருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொட்ர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவிலை. நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பாக அறிவிப்பு இல்லை. கடுமையாக எதிர்க்கிறோம். தவெக அரசு தாக்கல் செய்த வேளான் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுங்கள்.. என்று கூறினார்.

    English Summary

    Premalatha Vijayakanth has criticized the agriculture budget presented by the TVK government, stating that it contains nothing of substance. She pointed out that there were no announcements regarding the 100-day employment scheme or paddy storage warehouses, and alleged that the government merely renamed existing schemes.