நாங்க என்ன தக்காளி தொக்கா? ஆத்திரத்தில் அண்ணியார்! திமுகவின் பேச்சால் கொதிக்கும் தேமுதிக! என்னாச்சு?

  • சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகளை வைத்து அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் உரிய பெரிய விவாதமே நடந்து வருகிறது. கூட்டணி அமைத்தும் பெரிய வாக்கு வங்கியை தவெக பெறவில்லை எனவும், தனித்து நின்று திமுக வெற்றி பெற்றுள்ளதாக உடன்பிறப்புகள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டணியில் உள்ள தேமுதிக, மநீம, மமக, மஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் அதிருப்தில் இருக்கிறார்களாம். குறிப்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கின்றனர் கோயம்பேடு வட்டாரத்தினர்..

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். இந்த தேர்தலில் ஆளும் தவெக வெற்றி பெற்றிருக்கிறது.

    Advertisement

    திமுக இரண்டாவது இடத்துக்கும், அதிமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்தும், மடை மாறிய வாக்குகளை வைத்தும் தமிழக அரசியலக் களத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

    மதுராந்தகம் இடைத்தேர்தல்

    2026 சட்டசபை தேர்தலில் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் 31 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், தற்போது 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. திமுகவின் வாக்கு வங்கி 30ல் இருந்து 29 ஆகவும், அதிமுகவின் வாக்கு வங்கி 34ல் இருந்து 25 ஆகவும் குறைந்து இருக்கிறது. நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வாக்கு வங்கியும் மதுராந்தகத்தில் சரிந்து இருக்கிறது.

    Advertisement

    தாராபுரம் இடைத்தேர்தல்

    தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு வங்கி 23லிருந்து 37 ஆகவும், திமுகவின் வாக்கு வங்கி 32 இல் இருந்து 31 ஆகவும் குறைந்து இருக்கிறது. அதிமுக கடந்த தேர்தலில் 40 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இந்த தேர்தலில் 25 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருக்கிறது. நாம் தமிழர் கட்சியை பற்றி சொல்லவே தேவையில்லை. இதன் மூலம் அதிமுகவின் வாக்குகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு மாறி இருக்கிறது.

    வாக்கு வங்கி

    சத்யபாமாவின் தனிப்பட்ட வாக்கு வங்கி சரிந்ததாக சொல்லப்பட்டாலும் அனைத்து பிரிவினரின் வாக்குகளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது திமுகவினர் சமூக வலைதளங்களில் ஒரு வலுவான கருத்தை முன்வைத்து வருகின்றனர். தனித்து திமுக போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றிருப்பதாக சொல்கின்றனர். இது ஒரு வகையில் உண்மைதான்.

    Advertisement

    சட்டசபை தேர்தல்

    கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, முபுப, மமக, மஜக, மக்கள் நீதி மய்யம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் உள்ளிட்ட 26 கட்சிகளும் அமைப்புகளும் இருந்தன.

    திமுக கூட்டணி

    இந்த தேர்தலில் விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக, தவெக ஆதரவளித்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. அதை வைத்து சமூக வலைதளங்களில் திமுக தனித்து போட்டியிட்டு வென்றதாக கூறி வருகின்றனர். ஆனால் அது சில அரசியல் புள்ளிகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இடைத்தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென தன்னிடம் முக ஸ்டாலின் பேசியிருந்தார் எனக் கூறியிருந்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

    Advertisement

    கூட்டணி கட்சிகள்

    அது மட்டுமல்லாமல் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இன்னமும் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றன.

    பிரேமலதா விஜயகாந்த்

    குறிப்பாக கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 10 சீட்டுகள் ஒதுக்கிய திமுக இந்த தேர்தலில் தேமுதிகவின் ஆதரவை நாடி இருந்தது. பிரச்சாரத்திலும் தேமுதிகவின் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் எந்த கட்சி கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிட்டது போல திமுகவினர் பேசி வருவது, தேமுதிகவினரை, குறிப்பாக பிரேமலதா விஜயகாந்தை கோபப்படுத்தியுள்ளதாம். இது தொடர்பாக சக நிர்வாகிகளிடம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அண்ணியார் என்கின்றனர்.

    English Summary

    DMDK leader Premalatha Vijayakanth is reportedly unhappy with DMK supporters claiming the party contested alone, despite several parties remaining in its alliance.