Premalatha: விதினு ஒன்னு இருக்கு! சட்டசபையில் பழசை விஜய் கிளறியிருக்கக் கூடாது! பிரேமலதா வெளிநடப்பு!

  • சென்னை: சட்டசபை விதிகளின்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் பேசவே கூடாது. ஆனால் முதல்வர் விஜய் அது குறித்து பேசியிருந்தார் என தேமுதிக பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியிருப்பதாவது:

    Advertisement

    என்னுடைய கோரிக்கையை சட்டசபையில் வைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் பல்வேறு முறை கேட்டேன். ஆனால் என்னுடைய கோரிக்கை மறுக்கப்பட்டது.

    சர்க்காரியா கமிஷன் என்பது பழைய வரலாறு மற்றும் மிசா கைது செய்யப்பட்டது எல்லாம் பழைய வரலாறுகளுக்கான விஷயமாக இருக்கிறது.

    பழைய விஷயங்களை பற்றி பேசி கால நேரம் தாமதமாக, இதை விட தமிழ்நாடு மக்களுக்காகவும் ஆக்கபூர்வமான விஷயத்தை சட்டசபையில் பேசப்படவில்லை..

    பழையதை பற்றி பேசி பேசி காலத்தை தான் வீணடிக்கிறார்கள். மக்களுக்கு உபயோகமில்லாத ஒரு சட்டசபையாக நடந்திருக்கிறது.

    போக்குவரத்து துறையைப் பற்றி பேசி இருக்கிறோம். மிகவும் நஷ்டத்தில் ஈடுபடுகின்ற ஒரு துறை. அதை மேம்படுத்தும் நோக்கில் தான் ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

    Advertisement

    அதற்கான நடவடிக்கைகள் எதுவும் ஆளுங்கட்சியினர் செய்யவில்லை. விருதாச்சலம் பொருத்தவரை ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் திருப்பதி, திருச்செந்தூர், பழனி போன்ற இடங்களுக்கு நேரடி பேருந்து இல்லை.

    விருதாச்சலத்தில் உள்ள பணிமனையில் அவர்களுக்கு அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கிறது. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அறிவு வளர திட்டம் தீட்டி வளர்ச்சி தர வேண்டும்.

    விருத்தாச்சலத்தில் சிப்காட் கொண்டு வர வேண்டும். நெல் சேமிப்பு கிடங்கு விருத்தாச்சலத்தில் அமைத்து தர வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சூரியகாந்தி எண்ணெய் தொழிற்சாலை முன்பு நடந்து கொண்டு இருந்தது, தற்போது முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்தார்கள்.

    Advertisement

    அந்த தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். எல்லாருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். இந்த கூட்டத் தொடர் முடிகிறது, அடுத்த கூட்டத் தொடர் டிசம்பரில் இருக்கும் எனது சொல்லி இருக்கிறார்கள்.

    என்னைப் பொறுத்தவரை அதிகபட்ச நேரம் சண்டை போடுவதிலும், மக்களுக்கு பலன் இல்லாத விஷயத்திலும் செல்கிறது. நேற்று முதலமைச்சருடைய துறை, காவல்துறையை பற்றி பேசினார்.

    ஆனால் இப்பொழுது வரை காவலர்களுக்கு ஏதாவது அறிவிப்பு கொடுத்தாரா என்றால் இல்லை. அவர்கள் புதிதாக ஓய்வூதிய உயர்வு, குடியிருப்பு என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    மக்கள் வரிப்பணத்தில் சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது அதனால் மக்கள் பிரச்சனை பேச வேண்டும். மேட்டூருக்குச் சென்று அணையை திறந்து வைத்தார். ஆனால் அதை கடை மணி வரை சென்றதா என்பதை அவர் பார்க்கவில்லை. சகதிகள் முட்புதர்கள் என அனைத்தும் அங்கு இருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து இருக்க வேண்டும்.

    ஒரே நாளில் 6 கொலைகள் நடக்கிறது சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. போதை கலாச்சாரம் வளர்ந்து இருக்கிறது. இது வெறும் ஃபோட்டோ ஷூட் ஆட்சியாக மட்டுமில்லாமல் மக்களுக்கு பலன் உள்ள ஆட்சியாக இருக்க வேண்டும்.

    Advertisement

    பேரவை தலைவர் நடுநிலையோடு தான் செயல்படுகிறார், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். எல்லோரையும் அனுசரிக்கிறார், அதிகபட்சமாக அவரால் முடிந்தவரை வாய்ப்பு அளிக்கிறார்.

    அவர் அதிகமாக பேசியது அமருங்கள் அமருங்கள் என்பதுதான். இன்று அவையில் நடந்த விஷயம், பலமுறை அவர் இருக்கையில் அமருங்கள் என சொன்னார். அதைக் கேட்காமல் திமுக இருந்ததால் தான் அவர்களை காவலர்களை வைத்து வெளியேற்றி விட்டார். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    English Summary

    DMDK MLA Premalatha Vijayakanth concern about Assembly's quarrel between TVK ministers and DMK. She explained what happened today.