சென்னை: சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது பெண்கள் குறித்து அவதூறு பேசினால் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என கூறினார். இதற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்தார். மேலும் சோஷியல் மீடியாக்களில் பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் தவெக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று தமிழக சட்டசபை கூடியது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசினார். அப்போது, பெண்கள் குறித்து அவதூறு பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு என்றும் பேசினார்.
முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:- இன்றைக்கு முதல்வர் விஜய் அறிவித்த அறிவிப்புகளில் பெண்கள் குறித்து யாரும் தவறாக எந்த செய்திகளையும் பேசக்கூடாது. அதற்கு இந்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என ஒட்டுமொத்த பெண்களுக்காக அவர் சொல்லியிருக்கிறார். இதனை ஒரு பெண் தலைவராக, ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினராக அவருடைய கருத்துக்களை நான் நிச்சயமாக வரவேற்கிறேன் என்பதை இந்த அவையில் நான் குறிப்பிட கடமைப்பட்டு இருக்கிறேன். அதே நேரம் இந்த சட்டசபையில் முதல்வர் கவனத்திற்கு ஒருசிலவற்றை கொண்டு போக வேண்டும். அவர் சொன்ன கருத்து எல்லாருக்கும் ஒரு பொதுவான கருத்தாக இருக்க வேண்டும். இன்னைக்கு பெண் தலைவர்களாக இருக்கும் தலைவர்கள் குறித்து சோஷியல் மீடியாக்களில் கொச்சையாக பதிவிடுபவர்களில் தவெகவினரும் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே இதனை முதல்வர் கவனத்தில் கொண்டு தவெக உறுப்பினர்களையும் நீங்கள் கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்போது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், முதல்வர் அறிவித்தது எல்லாரையும் சேர்த்து தான் கூறினார். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சேர்த்து தான் அவர் அறிவித்தார். பெண்கள் குறித்து யார் அவதூறாக பேசினாலும் கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் பேசினார். எப்போதுமே இதை தான் அவர் சொல்வார். இது திமுகவினரின் வேலை.. அவர்கள் (திமுக) தான் இப்படி எங்கள் பெயரில் பேக் ஐடி ஓபன் செய்து இப்படி செய்கிறார்கள். கடந்த 10 வருஷமாக இப்படித் தான் திமுகவினர் எங்கள் பெயரிலே பேக் ஐடி ஓப்பன் செய்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். என் பெயரில், உங்க பெயரில் பேக் ஐடி ஓபன் செய்து இப்படி செய்கிறார்கள். எப்படி கேப்டன் விஜயகாந்த் அவர்களை என்னென்ன வழிகளில், எப்படி எப்படி சங்கடத்தை உருவாக்கினார்களோ, அதே போன்று தான் இப்போது செய்து வருகிறார்கள். அதை எல்லாம் தடுக்க தவெக அரசு அப்போது புஸ்சி ஆனந்த் எழுந்து நின்று, "பெண்கள் குறித்து எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது பேசியிருந்தால், செய்திருந்தால் அவர்களை கட்சியை விட்டே நாங்கள் நீக்கி இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். தொடர்ந்து பேசிய பிரேமலதா, அமைச்சர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையாகவே தவெகவில் இதை பின்பற்றி சோஷியல் மீடியாக்களில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருந்தால் நிச்சயமாக அனைத்து பெண்கள் சார்பாக அதனை நாங்கள் மனதார வரவேற்கிறோம்" என்று கூறினார்.வரவேற்கிறேன்
அமைச்சர் நிர்மல் குமார் பதில்
புஸ்சி ஆனந்த் பேச்சு