ஆளூர் ஷா நவாஸ் மீது கோபத்தில் தவெக.. திருமாவளவன் மீது வந்த சந்தேகம்.. அடுத்தது என்ன?

  • சென்னை: விசிகவில் இருந்து முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸை நீக்க வேண்டும் என்று திருமாவளவனிடம் அக்கட்சியினர் பலரும் அழுத்தம் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். திமுக ஆதரவு நிலைப்பாட்டில் ஆளூர் ஷா நவாஸ் இருப்பதாக ஒரு பக்கம் விசிகவினரும், ஆளூர் ஷா நவாஸை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாரா என்று மறுபக்கம் தவெகவினரும் அழுத்தம் கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், விசிகவும் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. அதிகாரத்தில் பங்கு என்ற விசிகவின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருந்தாலும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை திருமாவளவனால் சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே பொதுவெளிகளில் திருமாவளவனின் செயல்பாடுகள் சர்ச்சையாகி வருகின்றன.

    Advertisement

    அதேபோல் ஆளூர் ஷா நவாஸ்க்கு முதன்மைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும், அவர் தொடர்ச்சியாக தவெகவை கடுமையாக சாடி வருகிறார். பாஜகவின் பிராக்சி அரசு தான் தமிழ்நாட்டில் நடப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஷாநவாஸ் பேசிய கருத்துக்கள் விசிகவினர் மத்தியில் உஷ்ணமாக்கி இருக்கிறது.

    இதனால் ஷா நவாஸை விசிகவில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஷா நவாஸ் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் ஷா நவாஸ் தொடர்ச்சியாக விசிகவிலேயே பயணித்து வருகிறார்.

    Advertisement

    ஆனால் ஆளூர் ஷா நவாஸின் செயல்பாடுகளை தவெக ரசிக்கவில்லை என்று தெரிகிறது. ஒரு கட்டத்தில் திருமாவளவன் தான் தன்னுடைய விமர்சனங்களை ஷாநவாஸ் மூலமாக பொதுவெளியில் முன் வைக்கிறாரோ என்ற சந்தேகம் கூட தவெகவுக்கு எழுந்திருக்கிறது. இதனிடையே ஆகஸ்ட் 17ஆம் தேதி விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடக்கவுள்ளது.

    இந்த மாநாட்டுக்கு பின் ஆளூர் ஷா நவாஸ் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று விசிகவினர் கூறி வருகின்றனர். அதேபோல் விசிக மாநாட்டுக்கு பின் ஆளூர் ஷா நவாஸ் முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் விசிகவில் இருந்து திமுகவுக்கு செல்வாரா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

    English Summary

    Thirumavalavan: Pressure Mounts on VCK Chief Thirumavalavan to Oust Principal Secretary Aloor Shanavas