தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வேண்டும் என்ற ஆதவ்! காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் கொடுத்த ரீப்ளை

  • சென்னை: தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய நிலையில், இதுபற்றி தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராஜேஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ராஜேஷ்குமார், ஆதவ் அர்ஜுனா பேசியது அவரது நிலைப்பாடு எனவும், 2029 தேர்தலில் ராகுல் காந்தியை தவெக பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தென்னிந்தியாவில் இருந்து ஏன்.. தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசினார். தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிலையில், கூட்டணியில் முக்கிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாத நிலை தவெகவுக்கு உள்ளது.

    Advertisement

    ராஜேஷ் குமார் பதில்

    இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் முன்னிறுத்தி வரக்கூடிய சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு பேசுபொருளானது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மேற்கூறிய பேச்சு தொடர்பாக காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ராஜேஷ்குமார் கூறியதாவது:-

    ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்

    ஆதவ் அர்ஜுனாவின் கருத்து அவருடைய நிலைப்பாடு. தென்னிந்தியாவில் பிரதிநித்துவம் வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா அவருடைய நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறார். எங்களுடைய தலைவரை பொறுத்தவரை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவர். ராகுல் காந்தி, 2029 ஆம் ஆண்டு நிச்சயமாக பிரதமராக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

    Advertisement

    அப்போது விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பணிகளை அவரது டீம் செய்து வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராஜேஷ் குமார், "யூகத்திற்கு பதிலளிக்க முடியாது. இப்போது சிறப்பாக ஒரு லஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாத ஒரு அரசு தமிழ்நாட்டில் உள்ளது. எங்களுக்கு முதல்வர் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

    தவெகவுடன் இணைந்து மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதுதான் எங்களின் இலக்கு. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றால், தவெக ஏற்றுக்கொள்ளுமா? என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்" என்றார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'வட மாநிலங்கள் சேர்ந்தால் ஒரு பிரதமரை உருவாக்க முடியும் என்கிற நிலை இன்று வரை இருக்கிறது.

    Advertisement

    விஜய்க்கு ஆதரவாக வட இந்திய இளைஞர்கள்

    அது மாற்றப்பட வேண்டும். தென்னிந்தியாவில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் உத்தர பிரதேசத்துக்கோ, பீகாருக்கோ, குஜராத்துக்கோ மட்டும் அல்ல. நமது குரல் சட்டமன்றத்தில் ஒலிப்பது போல ஒரு பிரதமராக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்" என்றார். ஏற்கனவே முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வட இந்தியா இளைஞர்கள் இடையே ஆதரவு பெருகுவது போல சமூக வலைத்தளங்களில் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

    English Summary

    Prime Minister: When Minister Aadav Arjuna remarked that the Prime Minister should emerge from Tamil Nadu, reporters questioned Tamil Nadu Tourism Minister and Congress MLA Rajeshkumar about the statement. In response, Rajeshkumar stated that Aadav Arjuna’s remarks reflected his personal stance, adding that Rahul Gandhi would be accepted as the Prime Ministerial candidate for the 2029 elections.