டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை உயர்த்த உத்தரவிட கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு!

  • சென்னை: டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பஸ் கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில், உயர்நிலைக் குழு ஆலோசனை கூட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    பல்வேறு மாவட்டங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், சிறு வியாபாரிகள் என நாள்தோறும் பல லட்சக்கணக்கானோர் தனியார் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பஸ் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில், உயர்நிலைக் குழு ஆலோசனை கூட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு, உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    English Summary

    High Court has directed the Tamil Nadu government to submit a report within four weeks regarding the deliberations of the high-level committee, in a case filed by the Federation of Private Bus Owners' Associations seeking a bus fare hike in line with the rise in diesel prices.