இன்று நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்ட ஸ்ட்ரைக் வாபஸ்.. தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

  • சென்னை: தமிழக அரசு வெற்றி பயணத்​திட்​டத்​தில் தனி​யார் பேருந்​துகளை இணைத்து அதற்கு மானியம் வழங்க கோரி இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்​டத்​தில் ஈடுபட உள்​ள​தாக தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் கூட்​டமைப்பு அறி​வித்​திருந்தது. இந்நிலையில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் செயல்பாட்டுக்கு வந்தது. தவெக தேர்தல் வாக்குறுதியில் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.

    Advertisement

    அந்தன்படி தவெக ஆட்சி அமைத்ததையடுத்து முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெற்றிப் பயணம் திட்டத்தை அறிவித்தார். அதன்படி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

    வெற்றிப் பயணம் திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தனியர் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். வெற்றிப் பயணம் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கு விரிவுபடுத்த வேண்டும், அதற்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி போராட்டம் அறிவித்தது.

    Advertisement

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 30 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது. இதனால் தனியார் பேருந்துகளை தினசரி போக்குவரத்துக்காக நம்பியுள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டது

    முன்னதாக சென்​னை​யில் அக்​கூட்​டமைப்​பின் தலை​வர் தங்​க​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் பேசுகையில், "தமிழகத்​தில் உள்ள 7 அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​களின் கீழ் இயங்​கும் 69 சதவீத பேருந்​துகளில் மகளிருக்​கான கட்​ட​ணமில்​லாப் பேருந்து பயணம் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது.

    இந்தத் ​திட்​டத்​திற்கு 'வெற்றிப் பயணம்' எனப் பெயரிடப்​பட்​டு, வரும் அக்​டோபர் 2 ஆம் தேதி முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க உள்​ளார். வெற்றி பயணம் திட்​டத்​தில் அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவசப் பயணம் வழங்​கப்​படு​வ​தால், தனி​யார் பேருந்​துகளை இயக்க முடி​யாத சூழல் ஏற்​படும்.

    Advertisement

    இதனால் தனி​யார் பேருந்து துறையைச் சார்ந்​துள்ள சுமார் 3 லட்​சம் குடும்​பங்​கள் பாதிக்​கப்​படும். எனவே, அரசு பேருந்​துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனு​ம​திக்​கப்​படு​வதைப் போல, தனி​யார் பேருந்​துகளி​லும் பெண்​கள், திருநங்​கையர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் இலவச​மாகப் பயணிக்க அனு​ம​திக்க வேண்​டும்.

    அதற்​கான கட்​ட​ணத்தை அரசு மானிய​மாக தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களுக்கு வழங்க வேண்​டும். எங்​களது கோரிக்​கையை தமிழக அரசின் கவனத்​திற்கு கொண்டு செல்​லும் வகை​யில், செப்​.29 ஆம் தேதி (இன்​று) நள்​ளிரவு 12 மணி முதல் செப்​டம்பர் 30 ஆம் தேதி (நாளை) நள்​ளிரவு 12 மணி வரை தனி​யார் பேருந்​துகளை இயக்​​காமல் வேலைநிறுத்த போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளோம்." எனத் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஒருநாள் அறிவிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக, வருவாய் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் உறுதி அளித்ததை அடுத்து வழக்கம்போல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    English Summary

    The Private Bus Owners Association has announced that they will go on strike starting at midnight tonight, demanding that private buses be included in the Tamil Nadu government's 'Vettri Payanam' scheme and be provided with a subsidy.