சிஎம் விஜய்க்கு தலைவலி? வெற்றி மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்! தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்

  • சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விடியல் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. வெற்றி பயணம் என்ற இந்தத் திட்டத்தின் மூலம் மகளிருக்கு எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் டீலக்ஸ், புறநகர் பேருந்துகள், 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டுவரமுள்ள மகளிர் இலவச வெற்றி பயண திட்டத்தை திட்டத்தில் தனியார் பேருந்துகளை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் வழியாக நாள்தோறும் சுமார் 1.76 கோடி மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசு பேருந்துகளை பெரிதும் நம்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஆட்சியில் விடியல் பேருந்து பயணம் திட்டம் மூலம் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமலில் உள்ளது.

    மகளிர் இலவச பேருந்து பயணம்

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற தவெக தலைவர் விஜய் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். இதற்கிடையே கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் வெற்றி பயணம் என்ற பெயரில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் மகளிர் கட்டணம் இன்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    வெற்றி பயணத் திட்டம்

    தற்போது வெற்றி பயணத் திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர் நகர் பகுதியில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் ஆகியவற்றுக்கு பொருந்தும். மொத்தம் 12,692 பேருந்துகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் ஒரு நாளைக்கு 84 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் எனவும் அறிவித்தார்.

    பேருந்து உரிமையாளர்கள்

    இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் பேருந்து உரிமையாளர்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை முக்கிய கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர் பேருந்து உரிமையாளர்கள். அதாவது மகளிர் இலவச வெற்றிப் பயண திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தனியார் பேருந்துகளையும் இணைக்க வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    Advertisement

    தனியார் பேருந்து

    "தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ள மகளிர் இலவச வெற்றி பயண திட்டத்தை வரவேற்கிறோம். அதேசமயம் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிப்பு அடைந்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச வெற்றி பயண திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைத்து, தனியார் பேருந்துகளிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் அரசு மானியத்துடன் செயல்படுத்த தமிழ்நாடு முதல்வர் முன் வர வேண்டும்" என்கிறனர்.

    முதல்வர் விஜய்

    மேலும், ஒரு நடைக்கு 12 மகளிர் சீட்டுகள் ஒதுக்க கோரியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    Private bus owners protest across Tamil Nadu, seeking inclusion in the expanded Vetri Payanam free travel scheme for women.