சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரையும், ஒரு கிலோ தயிர் ரூ.2 வரையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வால் இந்த விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6.00 ரூபாய் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தனியார் பால் நிறுவனங்கள் தங்களுக்கான பால் கொள்முதலை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகின்ற சூழலில் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்வு அந்நிறுவனங்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியதால் வேறு வழியின்றி விவசாய பெரு மக்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தொடங்கின. அவ்வாறு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிய காரணத்தால் அந்த நிதியிழப்பை ஈடுசெய்ய தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் (செப்டம்பர்-21) தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஆரோக்யா நிறுவனம் தங்களின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரையிலும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு 2.00ரூபாயும் உயர்த்தியது. இந்த சூழலில் தென்னிந்தியாவின் முன்னணி முன்னன தனியார் பால் நிறுவனமான ஆரோக்யாவை தொடர்ந்து அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனாவாசா, வல்லபா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் செப்டம்பர் 26 (இன்று) முதல் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரையிலும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு 2.00ரூபாயும் உயர்த்தி உள்ளன. * அதன்படி 500மில்லி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 31.00ரூபாயில் இருந்து 32.00ரூபாயாக உயர்ந்துள்ளது. * ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 59ரூபாயில் இருந்து 61 ரூபாயாக மாற்றப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்களின் இந்த விற்பனை விலை உயர்வு காரணமாக ஆவினுக்கும், தனியார் பாலுக்குமான விற்பனை விலை வித்தியாசம் 500மிலி சமன்படுத்தப்பட்ட பாலுக்கு (நீலக்கலர் பாக்கெட் - Toned Milk) 7.00 ரூபாயும், நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு (பச்சை நிற பாக்கெட் -Standardized Milk) 15.00ரூபாயும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கு (ஆரஞ்சு நிற பாக்கெட் - Full Gream Milk) 12.00ரூபாயும் என சராசரியாக குறைந்தபட்சம் 14.00ரூபாய் முதல் அதிகபட்சமாக 30.00ரூபாய் வரை ஒரு லிட்டருக்கு விற்பனை விலை வித்தியாசம் இருப்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கவனம் ஆவின் மீது திரும்பக் கூடும் என்பதால் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் கூடுதலாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் பால் கொள்முதல் விலைக்கேற்ப விற்பனை விலையை மாற்றி அமைக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தற்போது லிட்டருக்கு 15.00ரூபாய்க்கு மேல் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4.70கோடி ரூபாய் இழப்பை சந்தித்து கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் ஆவின் நிறுவனம் முடங்கிப் போகும் பேராபத்தில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையில் மாற்றத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது'' என கூறப்பட்டுள்ளது.
* 500 மில்லி நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 35.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும்,
* 500 மில்லி கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 40 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும் உயர்த்தபடுகிறது.
*நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 68.00ரூபாயில் இருந்து 70.00ரூபாயாகவும் மாற்றப்படுகிறது.
* கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 78.00ரூபாயில் இருந்து 81.00ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
* 500 கிராம் (Toned Milk Curd) தயிர் 41.00ரூபாயில் இருந்து 42.00ரூபாயாகவும்
* 500 கிராம் Double Toned Milk Curd தயிர் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.