பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.300 மானியம் பார்க்க போன பெண்.. அக்கவுண்ட்டில் திடீரென ரூ.100 கோடி

  • சென்னை: கேஸ் சிலிண்டர் மானியத் தொகை தன்னுடைய வங்கிக் கணக்கில் வந்துவிட்டதா என்பதை பார்க்க வங்கிக்கு சென்றுள்ளார் காஷ்மீரா ஷேக் என்ற ஏழை பெண் தொழிலாளி.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து, மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது.. என்ன நடந்தது? யார் இந்த காஷ்மீரா ஷேக்?

    Advertisement

    மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம், குல்தாலிக்கு உட்பட்டது கிர்தன்கோலா என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் பெண்தான் காஷ்மீரா ஷேக்.. 36 வயதாகிறது..

    Advertisement

    ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த சின்ன வீட்டில் வசித்து வருகிறார்.. இவரது கணவர் கொல்கத்தாவில் பைகள் தயாரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். காஷ்மீரா ஷேக் வீட்டி‌லிருந்தபடியே "ஜரி" எம்பிராய்டரி வேலைகளை செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.. இதனால் அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.. அதற்காக இரவும் பகலும் தம்பதி இருவருமே உழைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

    மானியத் தொகை ரூ.100 கோடி

    இதனிடையே, காஷ்மீரா ஷேக், பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) குல்தாலி ஜம்தலா கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். சமீபத்தில் அவர் பதிவு செய்த எல்பிஜி சிலிண்டருக்கான மானியத் தொகை கணக்கில் வந்துவிட்டதா என்பதை சரிபார்க்க வங்கிக்கு சென்றுள்ளார்.

    Advertisement

    அங்குள்ள வங்கி ஊழியரிடம் தனது பாஸ்புக்கை கொடுத்து, மானிய தொகையான சுமார் ரூ.300 வந்துள்ளதா என்று பார்த்து சொல்லும்படி கேட்டுள்ளார்.. அப்போது கணக்கை சரிபார்த்த ஊழியர் ஆடிப்போனார்.. காரணம், காஷ்மீராவின் கணக்கில் ரூ. 99,99,99,997 (அதாவது 100 கோடி ரூபாய்க்கு வெறும் 3 ரூபாய் மட்டுமே குறைவு) இருப்புத் தொகையாக காண்பித்துள்ளது.

    இவ்வளவு பெரிய தொகை தன்னுடைய அக்கவுண்ட்டில் இருப்பதை பார்த்து காஷ்மீரா ஷேக்கும் ஷாக்கானார்.. வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தனர்..

    வங்கி கணக்கும் முடக்கம்

    பிறகு காஷ்மீரா தம்பதியினர், வங்கி மேனேஜரிடம் சென்று இந்த தொகை குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.. ஆனால் அதற்கு அவர் "எங்களால் எந்த விவரமும் சொல்ல முடியாது" என்று அலட்சியமாக சொல்லி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம்.. எனினும், அவர்கள் மீண்டும் மீண்டும் இதை பற்றி வலியுறுத்திக் கேட்டபோது, இது கணக்கு அமைப்பில் ஏற்பட்ட தவறு அல்லது சர்வர் கோளாறாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

    Advertisement

    இதையடுத்து, வங்கி அதிகாரிகள் உடனடியாக காஷ்மீரா ஷேக்கின் கணக்கை முற்றிலும் முடக்கிவிட்டார்கள்.. வேறு எந்த வங்கிக் கணக்கும் இல்லாத நிலையில், இருந்த ஒரே கணக்கும் முடக்கப்பட்டதால், காஷ்மீரா குடும்பத்தினர் தினசரி செலவுக்கு திணறும் நிலைமை வந்துவிட்டது. பிறகு தங்களுக்கு நேர்ந்த இந்த இன்னல் குறித்து காஷ்மீரா தம்பதியினர் குல்தாலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்கள்.

    47 கோடி ரூபாய்

    மேற்கு வங்கத்தில் இப்படியான வங்கித் தவறுகள் நடப்பது இது முதன்முறையல்ல. சமீபத்தில்தான் கொல்கத்தா பெலேகாட்டா பகுதியைச் சேர்ந்த நூபூர் குப்தா என்ற பெண்மணியின் வங்கிக் கணக்கில் காரணம் தெரியாமல் ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸ், வங்கி நிர்வாகம், வருமான வரித்துறை என மொத்த பேரும் இணைந்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

    Advertisement

    அதற்குள் இப்போது மீண்டும் ஒரு பெண்ணின் கணக்கில் ரூ.100 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!

    English Summary

    Punjab National Bank Customer Checks ₹300 LPG Subsidy, Finds ₹100 Crore in Her Account