ஜெயில் சப்பாத்தி வேண்டாம்.. வீட்டில் செய்த உணவு வேண்டும்.. கோர்ட்டில் அன்பில் மகேஷ் கோரிக்கை!

  • சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதும் கைது செய்யப்பட்ட அவர், சென்னை முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    Advertisement

    நீதிமன்றத்தில் அன்பில் மகேஸை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது, அன்பில் மகேஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட உடல்நலக் காரணங்கள், உணவு முறைகள் மற்றும் சிறை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளன.

    Advertisement

    நீதிமன்றத்தில் வைத்த முக்கிய கோரிக்கை

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அன்பில் மகேஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அவரது உடல்நிலை தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

    அன்பில் மகேஸ் கடந்த 2024-ஆம் ஆண்டு முதலே தீவிர கணையப் பிரச்சனை காரணமாகத் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். கைது செய்யப்படுவதற்கு முன்பாகக் கூட அவர் மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொண்டு வந்தார்.

    சாதாரண சிறை உணவு அவரது செரிமான மண்டலத்தையும் கணையத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி எண்ணெய் மற்றும் அதிக புரதம் இல்லாத எளிய உணவை மட்டுமே அவர் உட்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

    Advertisement

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அன்பில் மகேஸுக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு சிறை வசதிகள் மற்றும் அவரது மருத்துவப் பரிந்துரைக்கு ஏற்ற உணவுகளை வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    புழலில் வழங்கப்படும் உணவு விவரம்: சப்பாத்தி மற்றும் எளிய சாப்பாடு

    நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, புழல் மத்திய சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸுக்கு சிறப்பு மருத்துவ உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது:

    முற்றிலும் எண்ணெய் சேர்க்கப்படாத குழம்பு, சாதம், ரசம் மற்றும் வேகவைத்த காய்கறிகள் வழங்கப்படுகின்றன. வழக்கமான சாத உணவுகளுக்குப் பதிலாக, செரிமானத்திற்கு உகந்த சப்பாத்தி மற்றும் கஞ்சி இரவு உணவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆனால் அன்பில் மகேசோ.. ஜெயில் சப்பாத்தி தனக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் வீட்டில் இருந்து உணவு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் தான் முதல் வகுப்பில் இல்லை என்று அவர் வாதம் வைத்தார்.

    ஆனால்.. முன்னாள் அமைச்சர் மற்றும் முதல் வகுப்பு கைதியாக இருந்தாலும், சிறை விதிகளின்படி வெளியில் இருந்து சமைத்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு அனுமதி இல்லை. சிறை வளாகத்தில் உள்ள சமையலறையிலேயே மருத்துவர் கண்காணிப்புடன் இந்த உணவுகள் சமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

    சிறையில் கிடைக்கும் பிற வசதிகள்

    முதல் வகுப்பு கைதி என்பதால், அன்பில் மகேஸுக்கு மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை மற்றும் தனி கழிப்பறை வசதியுடன் கூடிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் உள்ள காரணத்தால், சிறை சீருடைக்கு மாற்றாக தனது சொந்த சாதாரண உடைகளையே அணிந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதே நேரத்தில், அறையில் குளிர்சாதன (ஏசி) வசதி கிடையாது என்பதால், புழல் பகுதியில் நிலவும் கொசுத் தொல்லை காரணமாக இரவில் தூங்குவதில் அவர் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இதையடுத்து அவருக்குக் கொசு விரட்டி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வழக்கின் தற்போதைய நிலை

    இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. அரசகுமார் மீது ஆரம்பத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் அவர் ஜாமீனில் வெளிவந்த சூழலில், பணப் பரிவர்த்தனைகள் அன்பில் மகேஸுக்கு சென்றதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஒரு பெண் தொழில்முனைவோரின் வீடுகளிலும் தேடுதல் வேட்டை நடந்து வரும் நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டு வருகிறது.

    English Summary

    Puzhal Jail Diet: Special Court Allows First-Class Ward and Medical Diet for Arrested Ex-Minister Anbil Mahesh