சென்னை: புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோடிய நிலையில், உதவி ஜெயிலர் மற்றும் சிறை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இருவரில் சுதீப் என்பவர் மட்டும் இன்று பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 3,300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புழல் மத்திய சிறையில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கைதிகள், அடுத்தடுத்து தப்பியோடினர்.
அதில், சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பாலியல் வழக்கில் திருமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மற்றொருவர், நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகத் என்பதும் தெரியவந்தது. தப்பிய இரண்டு கைதிகளையும் பிடிக்க காவல்துறையினர், 14 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கைதிகள் தப்பியோடிய சம்பவம் சிறைச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேபாளத்தைச் சேர்ந்த கைதி சுதீப் போகத் சென்னை அண்ணாநகர் பகுதியில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், ஆயுள் தண்டனை கைதி சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பிஓடிய விவகாரத்தில் வார்டன்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சட்ட ஒழுங்கு காலி.. இப்போ ஜெயிலுக்கே பாதுகாப்பு இல்லை! புழல் சிறையிலிருந்து கைதிகள் தப்பியது எப்படி?