மலைப்பாம்பு உயிருடன் சுற்றி வளைத்த 16 வயது சிறுவன்.. உடனே நம்பவே முடியல! கடைசியில் வந்த ரிப்போர்ட்

  • சென்னை: உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த புதர்களுக்கு நடுவே மறைந்திருந்த மலைப்பாம்பு ஒன்று சிறுவனைச் சுற்றிக்கொண்டதாக வெளியான தகவல், மொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது.. ஆனால், சிறுவனின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி வெளியான தகவல், அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துள்ளது.. என்ன நடந்தது? குஷிநகர் மாவட்டம், ராம்கோலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெகுவாட்டார் பர்வா சாப்ரா கிராமத்தை சேர்ந்த சிறுவன் கிஷன் ராஜ்பர்.. 16 வயதாகிறது. நேற்று முன்தினம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்துக்கு வெளியே உள்ள கால்வாயில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

    Advertisement

    கால்வாயின் கரையில் அடர்ந்த நாணல் புற்களும் புதர்களும் இருந்தன. அங்கு மீன் பிடிக்க தயாரானபோது, புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பு திடீரென கிஷனைத் தாக்கியிருக்கிறது..

    Advertisement

    மலைப்பாம்பு சுற்றிக்கொண்டது

    கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனின் உடலை மலைப்பாம்பு இறுக்கி சுற்றிக்கொண்டது.. உடம்பை சுற்றி வளைத்து, சிறுவனை நெரிக்கவும் தொடங்கியது.. இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறினான்.. பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள போராடினான்.. ஆனால் முடியவில்லை..

    வலியால் சிறுவன் அலறயதே கேட்டு, அந்த வழியாக சென்றவர்கள் பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர். கைகளிலிருந்த தடிகளால் மலைப்பாம்பை அடித்து, அதன் பிடியிலிருந்து சிறுவனை மீட்டுள்ளனர். அதற்குள் கிஷன் மயக்கம் போட்டு விழுந்து விட்டான்.. அந்த மலைப்பாம்பும் அருகிலிருந்த புதர்களுக்குள் தப்பிச் சென்றது.

    Advertisement

    16 வயது சிறுவன்

    இதற்கிடையே, தகவலறிந்து கிஷனின் அப்பா அனிருத் ஓடிவந்தார்..கிஷனை உடனடியாக ராம்கோலா அரசு சமூக சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றார். சிறுவனின் நிலைமை மோசமாக இருந்ததால், அங்கிருந்த மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு, ரவீந்திர நகர் துஸ் பகுதியில் உள்ள குஷிநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கிஷன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாவட்ட வன அலுவலர் வருண் சிங் உத்தரவின்பேரில், வனத்துறைக் குழுவினர் புதர்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மலைப்பாம்பு எந்த இடத்தில் மறைந்திருக்கிறது என்பதைக் கண்டறிய முடியாததால் இன்னமும் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    வெளியான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

    ஆனால், இந்த சம்பவத்தில், வெளியான தகவல்தான், இப்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.. கிஷனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், மலைப்பாம்பு இறுக்கியதாலோ, பாம்பு கடித்ததாலோ கிஷன் உயிரிழக்கவில்லை என்றும், தண்ணீரில் மூழ்கியதுதான் சிறுவனின் மரணத்துக்குக் காரணம் என்றும் உறுதியாகி உள்ளது..

    ராம்கோலா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்திரபான் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, மலைப்பாம்பு சிறுவனைச் சுற்றிக்கொண்டதை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை.. மீன்பிடிக்க கிஷனுடன் சென்ற சிறுவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் இந்தச் செய்தி பரவியது" என்றார்..

    சிறுவனை மலைப்பாம்பு சுற்றி வளைத்து நெரித்தபோது, கிராமத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்டுள்ளனர். ஆனால், தண்ணீரில் மூழ்கி இறந்ததாக ரிப்போர்ட் வந்தது எப்படி என்று குழம்பி போயிருக்கிறார்கள். அந்த மலைப்பாம்பு இப்போது எங்கிருக்கிறது என்றும் தெரியவில்லை.. தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம்தான் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது..!!

    English Summary

    Python Surrounded 16 year old boy Alive.. Unbelievable! Postmortem Report Reveals Shocking Twist