ஜோதிடர் ராதன் பண்டிட்டுக்கு விஜய் வீட்டில் இவ்ளோஉரிமையா? கரூர் நிகழ்வு முன்பே கணித்த அந்த 74 நாட்கள்

  • சென்னை: விஜய்க்கு நெருக்கமான ஜோதிடர் ராதன் பண்டிட் மீதான சலசலப்புகள் தினந்தோறும் பரவிக்கொண்டே வருகிறது.. தலைமைச்செயலகத்தில் இனி அவர் நுழையவே கூடாது என்றுகூட கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தபடி உள்ளன.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    Advertisement

    Valai pechu anthanan சேனலில் பேசியிருக்கும் அந்தணன், "விஜய்யின் அரசியல் பயணத்தின் பின்னணியிலும் கட்சி தொடங்குவதிலும் ஜோதிடர் ராதன் பண்டிட் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அவர் விஜய்க்கு நிழல் போல உடனிருந்தார். ஆனால், அண்மை காலமாக அவர் விஜய்யுடன் இல்லை என்கிறார்கள்.

    Advertisement

    வெற்றி சேனல் துவக்கம்

    முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணிக்கு சொந்தமான "வெற்றி சேனல்" தொடக்க விழா நடந்தது.. இந்த விழாவில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட ராதன் பண்டிட், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் வைத்ததே நான்தான் என்றார்.

    உடனே அந்த கிளிப்பிங் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு பிறகுதான், இந்த ஜோதிடர் பற்றின விவாதம் வெடித்து கிளம்பியது.. "தவெக கட்சியை உருவாக்கியதே நான்தான், தவெக கொடியை உருவாக்கியதும் நான்தான்" என்று போகிற எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறாராம்..

    ஜோதிடர் ராதன் பண்டிட்

    தவெகவில் இவரது பங்கு ஓரளவு இருந்தாலும், போற இடங்களிலெல்லாம் சொல்ல வேண்டுமா? என்று இது கட்சிக்குள் லேசான புகைச்சலையும் ஏற்படுத்தி விட்டது. இது ராதன் பண்டிட்டையே வெளியேற்றும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

    Advertisement

    ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் வெளியான தகவலின்படி, "ஜோதிடர் ராதன் பண்டிட்டை கோட்டைப் பக்கமே வரக்கூடாது என விரட்டி விட்டார்களாம். முதல்வரின் பெயரைக் கூடுதலாகப் பயன்படுத்தியதால் அவருக்கு வழங்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி பொறுப்பும் பறிபோனது. அவருக்கு எந்த வேலையும் செய்து கொடுக்கக் கூடாது என சீனியர் அதிகாரிகளிடம் கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உங்களையும் சி.எம்.ஆக்குகிறேன் என்று தெலுங்கானா ரட்சண சேனா கட்சியின் தலைவர் கவிதாவை சந்தித்துப் பேசியிருக்கிறாராம்" என்று செய்தி வெளியாகி உள்ளது. .

    கவிதாவுக்கு ஜோதிடம்

    ஆனால், உண்மையில் இப்படியெல்லாம் நடந்ததா? ஜோதிடர் நிஜமாகவெ கிளம்பி சென்றுவிட்டாரா? மறுபடியும் விஜய்யிடம் வரமாட்டாரா? என்ற பல கேள்விகளுடன், ஜோதிடர் ராதன் பண்டிட்டுக்கு நெருக்கமானவர்கள் சிலரை சந்தித்து பேசினோம். அவர்கள் நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்..

    Advertisement

    அதில், "ஜோதிடர், தெலுங்கானாவை கவிதாவை சந்தித்து பேசவில்லை.. கவிதாதான் ஜோதிடருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. ஏனென்றால் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்ததால் பல்வேறு தரப்பினரும் ஜோதிடரை தங்கள் ஆலோசகராக இருக்க அழைத்துள்ளனர். தனுஷை முதலமைச்சராக்க அவரை வளைக்கும் முயற்சிகளும் அப்படி நடந்ததுதான்.

    ஆனால், . விஜய் மற்றும் ராதன் பண்டிட்டுக்கு இடையேயான நட்பு மிகவும் நெருக்கமானது. பலரும் அவர் வெளியேற வேண்டும் என முயன்றதோடு, எதிர்க்கட்சிகள் வாயிலாக பிரச்சனைகளையும் கிளப்பினார்கள்.

    கரூர் சம்பத்தை முன்கூட்டியே சொன்னாரா

    ஆனால், கரூர் சம்பவத்திற்கு முன்பாகவே ராதன் பண்டிட் விஜய்யிடம், "வரவிருக்கும் 73 நாட்கள் கடுமையான நாட்களாக இருக்கும், உங்கள் மீது நிறைய பழி வரும்" என்று எச்சரித்தாராம்.. அதைக் கேட்டு விஜய்யும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்..

    Advertisement

    கரூர் சம்பவத்துக்கு பிறகு ஒருசிலரைத் தவிர வேறு யாரும் விஜய்யை சில நாட்கள் சந்திக்கவேயில்லை.. அந்த நேரத்தில் ராதன் பண்டிட் மட்டுமே தினமும் விஜய்யுடனேயே இருந்து நம்பிக்கை ஊற்றினார்.

    அதுமட்டுமல்ல, ஸ்டாலின் தனது தொகுதியில் தோல்வியடைவார் என்று ஏஎன்ஐ பேட்டியில் ஜோதிடர் கணித்ததால், திமுக தரப்பிலிருந்து மிரட்டல்களும் வந்தன. தேர்தல் ரிசல்ட் அன்று காலை 7.30 மணிக்கே பூங்கொத்துடன் விஜய்யின் வீட்டிற்கு சென்று, நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்" என்று உறுதியாக சொன்னது ஜோதிடர்தான் ராதன் பண்டிட்தான். விஜய் வீட்டிற்குள் சமைத்து சாப்பிடும் அளவுக்கு நெருக்கமான உறவு ஜோதிடருக்கு உள்ளது.

    Advertisement

    ஜோதிட ஆலோசனைகள்

    அதேபோல, விஜய்யை பெரிய பதவியில் அமர வைத்த பிறகு, இதே தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இந்த ஜோதிட ஆலோசனைகளை வழங்குவது துரோகம் என்றும் ஜோதிடர் முடிவு செய்துள்ளார்..

    ராதன் பண்டிட்டிற்கு உலகம் முழுவதும் சுமார் 7,000 கிளையண்டுகள் உள்ளனர். சான் பிரான்சிஸ்கோவில் பெரிய அலுவலகம் வைத்துள்ள ஜோதிடருக்கு, தவெகவிலிருந்து வெளியேறிற்றி விட்டாலும், தமிழ்நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்வதும் அங்கேயே தங்குவதும் பெரிய விஷயமல்ல. அந்தவகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தங்களுக்கு ஆலோசகராக வருமாறு ஜோதிடருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன" என்று ஜோதிடருக்கு நெரக்கமானவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

    விஜய் - ராதன் பண்டிட் நெருக்கம்

    உண்மையிலேயே ராதன் பண்டிட்டை வெளியேற்றி விட்டார்களா? அல்லது அவராகவே கிளம்பி சென்று விட்டாரா தெரியவில்லை.. ஆனால், தன்னால்தான் விஜய் வெற்றி பெற்றார் என்று தொடர்ந்து சொல்வதைதான் விஜய் ரசிகர்கள் விரும்பவில்லை.. அவர் சில இடங்களில் இதைப் பேசாமல் இருந்திருக்கலாம்.

    விஜய்யை பொறுத்தவரை பண்டிட் மீது எப்பொழுதும் அன்பும் மரியாதையும் கொண்டவர். பண்டிட்டை மற்றவர்கள் வெளியில் அனுப்பினாலும், விஜய் அவரிடம் போனில் பேசி மீண்டும் அழைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டிற்கு சென்றுள்ள பண்டிட் அங்கேயே தங்குவாரா அல்லது மீண்டும் திரும்பி வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Radhan Pandit Vijay House Close Bond.. His 73 Day Prediction Before Karur Incident Raises Questions