அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு

  • சென்னை: கடந்த சில நாட்களாகவே தான் முக்கியமான முடிவை அறிவிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறி வந்தார். இதையடுத்து அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறாரா? என்கிற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "நான் ஒரு வீடியோவை போட்டியிருந்தேன். அதில் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று கேட்டிருந்தேன். இதற்கு வயது வித்தியாசம் இல்லாமல் வரவேற்பு இருந்தது.

    Advertisement

    நான் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். விரைவில் அனைத்து ரசிகர்களையும் வரவழைத்து, என்னுடைய அம்மாவை வைத்து அந்த விஷயத்தை சொல்ல இருக்கிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு முக்கியம். என்னை உரிமையோடு அரசியலுக்கு அழைக்கின்றனர்.. என் அம்மாவின் முன்னிலையில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

    இதையடுத்து லாரன்ஸ் அரசியலுக்கு வருவாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நான் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறேன். அதை விரைவில் அறிவிப்பேன். அரசியலுக்கு வர விருப்பம் இருந்தால் உடனே வர வேண்டியதுதானே! ஏன் மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்? என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனவேதான் மக்களிடம் நான் கேட்டேன். இது என்னுடைய பாணி" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    இதையடுத்து திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், விரைவில் அனைவர் முன்னிலையிலும் இதை தெளிவுப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Raghava Lawrence: For the past few days, actor Raghava Lawrence had been stating that he was about to announce an important decision. This sparked speculation about whether he would be contesting from the Trichy East constituency. He has now issued a clarification regarding this matter.