அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை!

  • சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் முதல்வர் விஜய் உடனான நெருக்கம் மற்றும் தவெகவின் வளர்ச்சி குறித்து அதிகமாக பேசி இருக்கிறார். இதனால் ராகவா லாரன்ஸ் விரைவில் தவெகவில் இணைந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதை உறுதி செய்திருக்கிறார். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் தவெக சார்பாக போட்டியிடுவதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக பலரும் ராகவா லாரன்ஸை தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கூறி இருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லாரன்ஸ் பேசுகையில், ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமோ, அதேபோல் நண்பர் விஜய்யும் அதே அளவிற்கு நெருக்கம் தான். மேகமாய் வந்து போகிறேன் பாட்டில் தொடங்கி விஜய்க்காக நான் நடனம் அமைத்திருக்கிறேன். சரக்கு வச்சுருக்கேன், தாம் தக்க தீம் தக்க உள்ளிட்ட பாடல்கள் உங்களுக்கே தெரியும்.

    அவருக்காக மட்டுமே தமிழில் பணியாற்றினேன்.. வேறு யார் அழைத்தாலும் வர மாட்டேன். விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த போது, எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால் விஜய் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் பின்வாங்க மாட்டார். பின்னர் என்னுடைய அம்மாவை சந்தித்தேன். அவருடன் அரசியலில் இணையலாமா என்று அம்மாவிடம் கேட்டேன்.

    Advertisement

    உடனே என் அம்மா விஜய்யை சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அங்கு அழைத்து சென்றால், விஜய்யிடம் நீ அரசியலுக்கு வராதே.. என்று அட்வைஸ் கொடுக்க தொடங்குவேன் என்றார். அதனால் அரசியலுக்கு செல்லும் முடிவை எடுக்க தாமதமாகியது. இருந்தாலும் விஜய்யிடம் அரசியல் தொடர்பாக பேசிக் கொண்டே இருந்தேன். கூட்டணிக்கு யாரும் வராதது குறித்தும் புலம்பினேன்.

    ஆனால் தேர்தல் முடிவுகள் வரலாற்றை புரட்டி போட்டது. அதனை அம்மாவிடம் காட்டிய போது, நான் அரசியலுக்கு செல்ல நம்பிக்கையுடன் அனுமதி அளித்தார். இருந்தாலும் தாய்க்கு நிகராக இருக்கும் ரசிகர்களிடம் கேட்கிறேன்.. நான் அரசியலுக்கு வரலாமா.. நீங்களே சொல்லுங்கள்.. கமெண்ட் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ராகவா லாரன்ஸ் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் இணைவார் என்று சொல்லப்பட்ட சூழலில், விஜய்யுடனான நெருக்கம் குறித்து நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதேபோல் அரசியலில் தவெக அடைந்துள்ள வெற்றியை நினைத்து பெருமிதம் கொண்டுள்ளார். இதனால் ராகவா லாரன்ஸ் அடுத்த சில நாட்களில் தவெகவில் இணையும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Raghava Lawrence: Raghava Lawrence Praises CM Vijay’s TVK in New Video; Rumors Abuzz Over Electoral Debut from Trichy East