சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை!

  • சென்னை: தவெக மீது சிலர் குற்றம்சாட்டுகிறார்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தெரு நாய்கள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பீடு கொடுத்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ராகவா லாரன்ஸ் கடந்த சில நாட்களாகவே அரசியலில் நுழைவது குறித்து பேசி வருகிறார். அவரது பேச்சு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

    Advertisement

    அவர் பேசியதாவது, "கடந்த ஒரு மாதமாக இந்த அரசு என்ன செய்கிறது, அவர்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த அரசு ரொம்ப நன்றாக இருக்கிறது. சூப்பராக இருக்கிறது.

    அதற்கு முக்கியமான காரணம் உண்டு. அரசின் செயல்பாட்டில் ஒரு விஷயம் என்னை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்தது. கோயில்கள் முன் இருக்கும் மதுக்கடைகள், பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி இருக்கும் மதுக்கடையை மூடியது மிகவும் பிடித்திருந்தது. கல்வித்துறை அமைச்சருடைய நடவடிக்கை, அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கை எல்லாம் வீடியோவில் உங்களை மாதிரி தான் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    Advertisement

    அரசுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுகிறது. புதிய ஏரியாவில் வாடகை வீட்டுக்கு போகிறோம் என்றால், அந்த வாடகை வீடு வெளியே பார்க்கும்போது நன்றாக இருக்கும். வீட்டுக்குள் போனால் தான் எங்கே பைப் சரி இல்லை, எங்கே ஃபேன் சுத்த வில்லை, எந்த இடத்தில் பெயிண்ட் கொட்டுகிறது என்று தெரியும். ஒரு வீட்டுக்கு போவதற்கே அப்படி இருக்கிறது.

    ரோட்டில் இருக்கக்கூடிய தெருநாய் கூட நம்மை பார்த்தால் 'யார் அது புது ஆள் வந்திருக்கிறார்கள்' என்று கத்தும். அந்த தெரு நாய்க்கு புடிச்ச பிஸ்கட் போட வேண்டும், ஒரு சில தெருநாய்கள் எல்லாம் பிஸ்கட் சாப்பிடாது, நான்வெஜ் தான் சாப்பிடும். அதற்கு பிடித்த மாதிரி செய்து போட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாய்க்கு, ஒரு வீட்டுக்கு இவ்வளவு ஆகிறது என்றால்... ஒரு நாட்டை கொடுக்கும் பொழுது அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

    Advertisement

    அப்படியெனில் விமர்சகர்களையும், அரசின் செயல்பாடுகளையும் கேள்வி எழுப்பும் நபர்களையும் தெருநாய்கள் என்று லாரன்ஸ் கூறுகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    Raghava Lawrence has sparked criticism by drawing a comparison to street dogs in response to a question from reporters about the accusations leveled against TVK by some people.