விஜய்யால் கடுப்பான ராகுல்.. மனசை குளிர்விக்க போராடும் மாணிக்கம் தாக்கூர்.. முக்கிய முடிவு?

  • சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாக்கூர், கட்சியின் வளர்ச்சிக்காக எதையாவது செய்து மேலிடத்தின் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள் கதச்சட்டையினர். காரணம், இந்தியா கூட்டணியில் விஜய்யை கொண்டு வந்து சேர்க்க முயற்சிக்காததிலும், ராகுல் காந்தி தான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என்று அவரை சொல்ல வைக்கா தாதிலும் மாணிக்கம் தாக்கூர் மற்றும் ப்ரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் மேலிடத்துக்கு வருத்தம் இருந்து வருவதுதான் என்கிறார்கள்.

    Advertisement

    இந்த நிலையில் தான், கட்சியின் வளர்ச்சிக்காக ஏதேனும் அதிரடி சம்பவங்களை நடத்தினால் சூப்பராக இருக்கும் என்று மாணிக்கம் தாக்கூருக்கு அவரைச் சுற்றியுள்ள கோஷ்டியினர் தூபம் போட்டு வருகிறார்கள்.

    Advertisement

    இதனை உள்வாங்கியுள்ள மாணிக்கம் தாக்கூர், தமிழக காங்கிரஸ் பலம் பெற்றுள்ளதாக காட்ட வேண்டுமானில், காங்கிரசை விட்டு பிரிந்து தனி கட்சி நடத்தி வரும் ஜி.கே.வாசனின் த.மா.கா.வை மீண்டும் காங்கிரஸில் இணைக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறாராம். அதற்கான முயற்சியும் எடுக்க பட்டு வருகிறது.

    கடந்த 31-ந்தேதி ஜி.கே.வாசனின் தந்தை மூப்பனாரின் நினைவு தினம். அன்றைய தினம் மாணிக்கம் தாக்கூர் உட்பட காங்கிரஸ் பலரும் அவரது நினைவிடத்துக்கு சென்று ஜி.கே.வாசனுடன் இணைந்து அஞ்சலி செலுத் தினர். அப்போது ஜி.கே.வாசனிடம் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார் மாணிக்கம் தாக்கூர். அந்த பேச்சு அத்தோடு நிற்கவில்லை. தொடர்ந்து இருவரும் பேசி வருகிறார்கள்.

    Advertisement

    ஏற்கனவே, இனி தனி கட்சி நடத்தி போணியாக முடியாது; தனி கட்சி நடத்துவதற்கும் தெம்பில்லை என்கிற முடிவில் இருக்கும் ஜி.கே.வாசனிடம், த.மா.கா. மூத்த நிர்வாகிகள் பலரும், காங்கிரசில் இணைந்து விடலாம் தலைவரே...முயற்சித்துப் பாருங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்த வலியுறுத்தல்கள் இப்போதும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழலில் தான் வாசனும் தாக்கூரும் அடிக்கடி விவாதிக்கி றார்கள். காங்கிரசில் மீண்டும் இணைந்து விடுங்களேன் என தாக்கூர் சொல்ல, நானும் அதைத்தான் யோசிக்கிறேன் என்று தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் வாசன். அதற்கு, மேலிடத்தில் பேசுகிறேன் என்று மாணிக்கம் தாக்கூர் சொல்ல, ராகுல்ஜியிடம் பேசுங்கள். அவருக்கு ஓ.கே. வா? என்பது முதலில் எனக்கு தெரிய வேண்டும் என்று வாசன் சொல்ல, உங்கள் மீது ஆரம்பத்தில் ராகுல்ஜிக்கு கோபமும் வருத்தமும் இருந்தது உண்மை. இப்போதெல்லாம் அப்படி எதுவும் இல்லை.

    Advertisement

    காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றுதான் ராகுல்ஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதனால், நான் அவரிடம் பேசுகிறேன் என்ற மாணிக்கம் தாக்கூர், என்ன ஒன்னு... மீண்டும் நீங்கள் இணையும் போது முன்பு மாதிரி நிபந்தனைகள் ஏதும் நீங்கள் சொல்லக்கூடாது என ராகுல்ஜி எதிர்பார்ப்பார். குறிப்பாக, தலைவர் பதவியை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில், இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் என்னை நியமித்தார்கள். என்னை உடனடியாக மாற்றவும் ராகுல் ஜி விரும்பமாட்டார். அதனால் கண்டிசன் எதுவும் இல்லை எனில் இணைவது சாத்தியம் தான் என்று விரிவாகப் பேசியுள்ளார் மாணிக்கம் தாக்கூர்.

    Advertisement

    நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது என்ற வாசன், ராகுல்ஜியிடம் பேசுங்கள்; அவரின் எண்ணம் எதுவாக இருக்கிறது என தெரிந்து கொண்டு பிறகு ஆலோசிப்போம் என்று சொல்லியுள்ளார் வாசன் என்கிறார்கள் த.மா.கா. வின் மூத்த நிர்வாகிகள்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Rahul Gandhi angry at Vijay over PM Candidate: Manickam Tagore plan to cool down the situation