Thirumavalavan: ராகுல் காந்தியா? விஜய்யா? யார் பிரதமர் வேட்பாளர்? விசிக நிலைப்பாடு என்ன? திருமாவளவன் கொடுத்த ரீப்ளை

  • சென்னை: முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தவெக அமைச்சர்கள் கூறுவதும் இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருவதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், தவெகவின் முன்னணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை.

    Advertisement

    அமைச்சர்களாக இருந்தாலும், தொண்டர்களின் மனநிலை இருக்கவே செய்யும். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். 2029 தேர்தல் வரட்டும், அப்போது அது குறித்து கூறுகிறேன்" என்றார்.

    Advertisement

    யார் பிரதமர் வேட்பாளர்?

    தமிழக முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெக அமைச்சர்கள் சிலர் அளித்த பேட்டி, தவெக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை முன்னிறுத்தி வரக்கூடிய நிலையில், விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று அமைச்சர்கள் கூறியதால் காங்கிரஸ் கட்சியினருக்கும் தவெகவினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

    இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 9.2% ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அதாவது, மோடி, ராகுலுக்கு அடுத்த இடத்தில் விஜய் இருந்தார். முதல்வராக பதவியேற்று 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், வட மாநிலங்களிலும் விஜய்க்கு அபரிமிதமாக செல்வாக்கு பெருகி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

    Advertisement

    கூட்டணி கட்சிகள் கூட்டம்

    ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்தே விலகுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியிருந்தனர். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றும் தவெகவும் இதை ஏற்றுக்கொண்டு இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது.

    ஆனாலும் தவெக எம்.எல்.ஏ கனிமொழி உள்ளிட்டோர் தொடர்ந்து விஜய்தான் அடுத்த பிரதமர் எனப்பேசி வருவது, தவெக - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக அமைந்துள்ளது. தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திருமாவளவன் பதில்

    இந்தக் கூட்டத்தில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் வைக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு பிரதமர் வேட்பாளர் தொடர்பான தொடர் விவாதங்களுக்கும் முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிறுத்துவது பற்றி விசிக நிர்வாகியும் அமைச்சருமான வன்னி அரசுவிடம் கேட்ட போது அவர் மழுப்பலான பதிலையே அளித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வன்னி அரசு கூறும் போது, "இவ்விவகாரம் குறித்து திருமாவளவன் கருத்து கூறுவார்" என்று கூறியுள்ளார். முன்னதாக திருமாவளவனிடம் நேற்று செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது பேசிய திருமாவளவனிடம் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது:-

    Advertisement

    "தவெகவின் முன்னணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை. மற்றவர்கள்தான் கூறி வருகிறார்கள். இதனை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுக்க முடியாது. அமைச்சர்களாக இருந்தாலும், தொண்டர்களின் மனநிலை இருக்கவே செய்யும். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். 2029 தேர்தல் வரட்டும், அப்போது அது குறித்து கூறுகிறேன்" என்று கூறியிருந்தார்.

    English Summary

    Thirumavalavan: Amid the stir in Tamil Nadu political circles caused by TVK functionaries projecting leader Vijay as the next Prime Ministerial candidate—and the Congress party’s counter-responses—reporters questioned VCK leader Thirumavalavan about the Prime Ministerial candidacy issue.