ஆகஸ்ட் 1ல் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி.. உறுதி செய்த மாணிக்கம் தாகூர்.. பயணத்தின் பின்னணி என்ன?

  • சென்னை: ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ள நிலையில், ராகுல் காந்தியின் தமிழ்நாடு பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் பயணத்திற்கான பின்னணி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    Advertisement

    நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிஜேபியின் தொடர் போராட்டம் காரணமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிஜேபியின் இந்த போராட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு எதிர்க்கட்சிகளும் முக்கியக் காரணம்.

    Advertisement

    அதேபோல் முழுக்க முழுக்க இளைஞர்களும், மாணவர்களும் பாஜகவுக்கு எதிராக கொந்தளித்தருப்பது அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது. இளைஞர்களின் குரலுக்கு பாஜக அடி பணிந்ததை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு எதிராக மக்களை தயார் செய்வதில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு வரவிருக்கிறார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது.

    Advertisement

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார். அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.

    தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும் என்று பதிவிட்டுள்ளார். தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    Rahul Gandhi: Rahul Gandhi Announced to Visit Tamil Nadu on August 1 Amid TVK - Congress Coalition