சென்னை: எத்தனை ஆயிரம் போலீசாரை அழைத்து வந்தாலும் அஞ்சப்போவது இல்லை. இளைஞர்களை கண்டு தாம் பெருமை அடைவதாகவும், தொடர்ந்து போராடுங்கள், நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் போராட்டத்திற்கு வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மற்றும் இடது சாரி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கைது ஆன நிலையில் ராகுல் காந்தி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த கதையின் வில்லன்கள் மோடி, அமித்ஷா, அஜித் தோவல், மோகன் பகவத் இவர்கள்தான். இவர்ளை சுற்றியுள்ள களம் மெல்ல மெல்ல சுருங்கி கொண்டு இருக்கிறது. நாம் தான் அந்த களத்தை சுருக்கி கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக, ஆர்.எஸ்.எஸ்சை எதிர்த்து நான் போராடி வருகிறேன். நீங்கள் எப்படி எதிராளிகளை நன்கு புரிந்து கொண்டு இருக்கிறீர்களோ அதேபோல நானும் ஆழமாகவும் தெளிவாகவும் புரிந்து கொண்டு இருக்கிறேன். இவர்களுடைய அடிப்படை பண்பே கோழைத்தனம்தான். இந்த கதையின் வில்லன்கள் யார் என்றால் மோடி, அமித்ஷா, அஜித் தோவல், மோகன் பகவத் இவர்கள்தான். இவர்ளை சுற்றியுள்ள களம் மெல்ல மெல்ல சுருங்கி கொண்டு இருக்கிறது. நாம் தான் அந்த களத்தை சுருக்கி கொண்டு இருக்கிறோம். பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான போராட்டம் தொடரும். பிரதமர் மோடி அரசாங்கத்தின் செயல்பாடு காழ்ப்புணர்ச்சி கொண்டது. எத்தனை ஆயிரம் போலீசாரை அழைத்து வந்தாலும் அஞ்சப்போவது இல்லை. இளைஞர்கள் தொடர்ந்து போராட வேண்டும். இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். தலைவர்கள், இளைஞர்களை கைது செய்தாலும் போராட்டங்கள் தொடரும். இந்திய அரசியல் அமைப்பையும் மக்களின் குரலையும் நிச்சயம் பாதுகாப்போம்.தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்" என்று கூறியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்தனர். எனினும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க டெல்லி காவல்துறை மறுத்தது. இருந்தாலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உறுதியாக இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவ்டிக்கையாக கரப்பான் பூச்சி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இளைஞர்களின் போராட்டத்தில் பங்கேற்க வந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கேவும் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் போராட்டத்திற்கு வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இந்த சூழலில்தான் ராகுல் காந்தி இளைஞர்களுக்கு ஆதரவாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.ராகுல் காந்தி வீடியோ
வாக்கு திருட்டு என்றால் ஆதாரம் கொடுங்க.. ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்களிடம் நேரடியாக கேட்ட ஜனாதிபதி
எத்தனை ஆயிரம் போலீசாரை அழைத்து வந்தாலும்
டெல்லியில் வலுக்கும் போராட்டம்
ராகுல் காந்தியும் - விஜய்யும் சென்ற உணவகம் யாருக்கு சொந்தமானது தெரியுமா?