“தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள் - ராகுல் காந்தி மறைமுக தாக்கு!

  • சென்னை: "பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் அவர்கள் தமிழ்நாட்டின் 21 ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

    Advertisement

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

    Advertisement

    செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தமிழக மக்களின் வாக்குகளைப் பறிக்கும், அதிகாரத்தைப் பறிக்கும் சதித் திட்டத்துடனேயே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது பாஜக. தமிழகத்திnன் பழங்கால வரலாற்றில் எட்டப்பன் என்ற சரித்திர புகழ்பெற்ற கதாபாத்திரம் உண்டு. துரோகம் என்ற அடையாளத்திற்காக தமிழக மக்கள் பயன்படுத்தும் வார்த்தை தான் எட்டப்பன்.

    தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவை தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன காலத்தின் எட்டப்பன்கள். 21 ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்தான்.

    Advertisement

    தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறவர்கள்தான். தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்கிறவர்கள்தான். தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக்கூடாது. ஒவ்வொரு மாநில கட்சியும், தேசிய கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதவை தோற்கடிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

    தொகுதி மறுவரையறை மசோதா தென் மாநிலங்களைப் பாதிக்கும் எனக் கடுமையாக எதிர்த்து வந்தது திமுக. தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களைத் திரட்டி ஆலோசனையும் நடத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்தச் சூழலில் அண்மையில் மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    Advertisement

    ஆனால் இதனை மறுத்த திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர், தொகுதி மறுவரையறை மசோதா பற்றி மத்திய அரசு எதுவும் சொல்லாத நிலையில் எங்கள் நிலைப்பாட்டையும் சொல்ல முடியாது. அப்படி மத்திய அரசு, விளக்கம் அளித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் சொல்வோம் எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான் திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.

    English Summary

    “Whoever supports the BJP government’s constituency delimitation bill is an ‘Ettappan’ of 21st-century Tamil Nadu,” lashed out Rahul Gandhi.