டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய அளவில் மிகப்பெரிய அரசியல் புயல் கிளம்பியுள்ளது. மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின தலைவர் விஜய், பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காப்பது தேசிய அரசியலிலும் தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய் மீது ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், தனது போராட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து திமுக எம்பிக்களின் முழு ஆதரவைப் பெற அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மற்றும் தேர்தல் நடைமுறைகளில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆணையர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நடத்திய புலனாய்வு விசாரணையில், கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக குறைந்தபட்சம் 14 முறை தங்கள் எதிர்ப்பு கடிதங்களை பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 4 முறை ஆட்சேபனை கடிதங்கள் அனுப்பப்பட்ட சம்பவங்களும் இதில் அடங்கும். வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' (Special Intensive Revision - SIR) நடவடிக்கைகளில் தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், தங்கள் ஆலோசனைகளை மீறி சட்டவிரோதமான நடைமுறைகள் புகுத்தப்படுவதாகவும் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டங்களை அறிவித்து உள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். தமிழக அரசியலில் தீவிரமாகக் களமிறங்கி, இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவிதமான கண்டன அறிக்கையையோ அல்லது கருத்தையோ பதிவு செய்யவில்லை. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி இருந்தும் கூட அவர் இதுவரை தேர்தல் ஆணைய விவகாரம் பற்றி பேசவே இல்லை. பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய ஜனநாயக அமைப்புகள் மீதான இத்தகைய தேசிய அளவிலான பிரச்னைகளில், ஒரு மாநிலத்தின் முக்கியக் கட்சித் தலைவரான விஜய் வாய் திறக்காமல் இருப்பது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயங்குகிறாரா என்ற கேள்வியும் எழத் தொடங்கியுள்ளது. தேர்தல் முறைகேடுகள் பற்றிப் பேசாமல் மவுனம் சாதிப்பது சரியான அரசியல் நிலைப்பாடு அல்ல என ராகுல் காந்தி கருதுவதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்த அமைதியான அணுகுமுறை காரணமாக, தமிழகத்தில் தனது போராட்டங்களை வலுப்படுத்த திமுக தலைமையின் பக்கம் காங்கிரஸ் மேலும் நெருக்கமாகியுள்ளது. மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து எதிர்த்து வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி, டெல்லியிலும் தமிழகத்திலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் தெருக்களிலும் தீவிரப்படுத்த ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். திமுக எம்பிக்கள் ஏற்கெனவே மத்திய அரசுக்கு எதிராக உறுதியான குரலை எழுப்பி வரும் நிலையில், தேர்தல் ஆணையப் பிரச்னையில் அவர்களுடன் இணைந்து ஒரு வலுவான போராட்டக் கூட்டணியை உருவாக்கக் காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதன்மூலம், தேர்தல் ஆணைய விவகாரத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற ராகுல் திட்டமிட்டுள்ளார். விஜய், மக்களுக்கான அரசியல், ஊழலற்ற நிர்வாகம், ஜனநாயகப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேசுவதாகக் கூறினாலும், மத்திய அரசின் முக்கிய விவகாரங்களில் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தன்னாட்சி அதிகாரம் குறித்த இந்த சிக்கலில் விஜய் தனது மௌனத்தைக் கலைப்பாரா அல்லது தொடர்ந்து ஒதுங்கி நிற்பாரா என்பதைத் தமிழக மக்களும் அரசியல் நோக்கர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.தேர்தல் ஆணைய விவகாரமும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டும்
தேர்தல் ஆணைய விவகாரம் பின்புலம்
விஜய் அமைதி காப்பது ஏன்? ராகுல் காந்தியின் அதிருப்தி
திமுக பக்கம் திரும்பும் காங்கிரஸ்
மக்கள் மத்தியில் எழும் கேள்விகள்