சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மதிய விருந்து அளித்தார். பின்னர் ராகுல் காந்தியை தனது காரில் அமர வைத்து பாலவாக்கத்தில் உள்ள தோனிக்கு சொந்தமான உணவகத்திற்கு முதல்வர் விஜய் அழைத்து சென்றார். அங்கு இருவரும் பிடித்தமான உணவுகளை சாப்பிட்டபடி கலந்துரையாடியுள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று வருகை தந்தார். இன்று மாலை 4 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், சென்னை ஏர்போர்ட்டில் இருந்து நேராக முதல்வர் விஜய் இல்லத்திற்கு ராகுல் காந்தி சென்றார்.
நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் ராகுல் காந்திக்கு மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் ஒரு மணி நேரம் கட்சி நிர்வாகிகள் இன்றி தனியாக ஆலோசனை நடத்தினர். பிறகு ஒரே காரில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். முதல்வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்திலும் பெரிதும் கவனம் பெற்றது. இருவரும் எங்கே செல்கிறார்கள் என்று முதலில் தெரியாத நிலையில், முதல்வரின் கார் கன்வாய், பாலவாக்கத்தில் உள்ள கஃபே ஒன்றிற்கு சென்றது. கஃபேவுக்கு சென்ற ராகுல் காந்தியும் விஜய்யும் பாலவாக்கத்தில் உள்ள அந்த கஃபேயில் ஒன்றாக அமர்ந்து கேப்பச்சினோ (Cappuccino) சாக்கலேட் பிஸ்கட்ஸ் உள்ளிட்டவை அருந்தியதாக கஃபே ஊழியர்கள் தெரிவித்தனர். காஃபி அருந்தியபடியே இருவரும் ஆலோசனை செய்தனர். சுமார் 10 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்ற நிலையில், பின்னர் இருவரும் தனித்தனி காரில் புறப்பட்டு சென்றனர். முதல்வர் விஜய் தனது இல்லத்திற்கும், ராகுல் காந்தி தாஜ் ஒட்டலுக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, பாலவாக்கத்தில் விஜய்யும் ராகுல் காந்தியும் சென்ற உணவகம் , முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியுடன் தொடர்புடையது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பங்குதாரராக உள்ளாரா? அல்லது அவருக்கு சொந்தமானதா? என்ற விவரங்களை முழுமையாக அறிய முடியவில்லை.காஃபி அருந்திய விஜய் ராகுல் காந்தி
முதல்வர் விஜய் - ராகுல் காந்தி ஒரே காரில் பயணம்! பாலவாக்கம் கஃபேயில் காபி குடித்தபடி ஆலோசனை
எம்.எஸ் தோனிக்கு சொந்தமான கஃபே?
துண்டு 2 பக்கமும் போட்ட ராகுல் காந்தி? ஸ்டாலின், விஜய் தரப்பில் இப்படியெல்லாம் நடந்ததா? நம்ப முடியல