சென்னை: பிரதமர் வீட்டு முன்பு போராடிய ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்பட பலரையும் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று வாகனங்களில் போலீசார் ஏற்றி கைது செய்தனர் . இதில் காயம் அடைந்த ராகுலின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் திமுக ண்டனம் தெரிவிக்கவில்லை.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுத்தமாக கண்டுகொள்ளவில்லை.. தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கண்டுகொள்ளவில்லை.. திமுக சார்பில் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் மொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் த சமூக ஆர்வலர் சோனம் வாங்கசுக் இணைந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாகவும் அறிவித்தார். இதனால் அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர, மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றார்கள். கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் தடுக்க முடியாத காரணத்தால், தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்கவீச்சும் நடந்ததாக சொல்லப்படுகிறது. போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்டதால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விஸ்வரூபம் ஏற்பட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை கையில் எடுத்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தினார். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை.. இதையடுத்து பிரதமர் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் சாலை நோக்கி பேரணியாக நடந்து சென்றனர். இவர்கள் வரப்போவது குறித்த எந்த விஷயமும் உளவுத்துறைக்கோ, டெல்லி போலீசுக்கோ தெரியவில்லை . பிரதமர் இல்லத்தின் பிரதான வாசலுக்கு சென்று போராடினார்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் உடனடியாக வந்தார்கள். மத்திய பாதுகாப்பு படைகளும் விரைந்து வந்தன. இதனிடையே விஸ்வரூபம் எடுத்த இந்த போராட்த்தில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாணவர்கள் மீது தடியை நடத்த உத்தரவிட்டவர்கள் பதவியில் நீடிக்க உரிமை இல்லை என்று ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டர். ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்பட பலரையும் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று வாகனங்களில் ஏற்றினர். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் திமுக இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுத்தமாக கண்டுகொள்ளவில்லை.. எனினும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. டெல்லியில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு ஆகியவற்றை பற்றி மட்டுமே, அதுவும் இப்போது தான் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கண்டுகொள்ளவில்லை.. திமுக சார்பில் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. எனினும் அதற்கு முதல் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் நடத்த தாக்குதலுக்காக மட்டும் உதயநிதி கண்டனம் தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணியைவிட்டு காங்கிரஸ் விலகியதை, திமுக தலைவர்கள் துரோகமாகவே பார்க்கிறார்கள். அதுதான் ராகுல் காந்தி கைதுக்கு கூட ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காத அளவிற்கு அவர்களிடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.