இனி ஜெட் வேகத்தில் டிக்கெட் புக் பண்ணலாம்.. பக்காவாக ரெடியாகும் ஐஆர்சிடிசி இணையதளம்!

  • சென்னை: மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி ஆப், இணையதளம் மூலம், இனி நிமிடத்திற்கு 32 ஆயிரம் டிக்கெட்டுக்கு பதிலாக ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. முற்றிலும் புதிதாக, நவீன மேம்பாடுகளுடன் இந்த ஆப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதோ, தட்கல் டிக்கெட் போடும்போதோ என்னென்ன பிரச்சனைகள் இருந்ததோ அவையெல்லாம் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி டிக்கெட் புக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப ரயில்வேயிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி டிக்கெட் புக் செய்வதற்கு சிரமமாக இருப்பதாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்த நிலையில், ஐஆர்சிடிசி செயலியை மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் பல்வேறு புது அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    புதிய, நவீன அம்சங்களுடன்

    நாட்டின் மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து அமைப்பான இந்தியன் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். தற்போது பெரும்பாலான பயணிகள் ரயிலில் டிக்கெட்டினை முன்பதிவு செய்தே பயணிக்கின்றனர். கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. இதனால் அதிகம் பேர் ஒரே நேரத்தில் ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்வதால் சில பயணிகளுக்கு புக் ஆகாமல் எரர் வந்துவிடுகிறது.

    அதிலும் குறிப்பாக தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது கட்டணம் செலுத்திய பிறகும் கூட எரர் காண்பித்து டிக்கெட் கைக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. மேலும் ஒரு டிக்கெட் பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் எடுப்பதாகவும் பயணிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்த நிலையில் தான் இவற்றை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் விரைவில் புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    Advertisement

    ஒரு நிமிஷத்தில் 1.50 லட்சம் டிக்கெட்கள்

    ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் ஆகியவற்றின் அதிகாரிகள், எம்.என்.ஐ.டி. கல்வி நிறுவன மாணவர்களுடன் சந்தித்து புதிய இணையதளத்தின் பீட்டா வெர்ஷனின் செயல்முறையை விளக்கத்துடன் அறிமுகப்படுத்தினர். புதிய பீட்டா பதிப்பு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், அதில் தேவையான மேம்பாடுகளைச் செய்யும் நோக்கில் மாணவர்களிடமிருந்து கூடுதல் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் அதிகாரிகள் பெற்றனர்.

    இதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்பில் புதிய தொழில்நுட்பத்துடனும், புதிதாக, அதிவேகமாக செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது முன்பெல்லாம் ஒரு நிமிடத்தில் 32 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால் இந்த மேம்படுத்தப்பட்ட செயலியில் ஒரு நிமிடத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெடுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    Advertisement

    என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

    இதுமட்டுமின்றி பிஎன்ஆர் எனப்படும் ரயில் குறித்த தகவலை தெரிந்துகொள்ள நிமிடத்திற்கு 4 லட்சம் என்று இருந்த நிலையில் தற்போது 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது கேப்சா வருவது, சர்வர் இஸ்யூ, தேவையற்ற விளம்பரங்கள் வருவது எல்லாம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு எந்தவித இடையூறும் டிக்கெட் புக் செய்யும் போது இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாம்.

    தேவையற்ற கேப்சாக்கள், பாப் அப்ஸ்கள், கிராபிக்ஸ்கள் என கவனத்தை திசை திருப்பும் செயல்கள் நீக்கப்படுகிறது. ரயிலில் இருக்கை விவரத்தை பயணிகள் தேடும் போது, அனைத்து வகுப்புகளிலும் எத்தனை சீட்கள் காலியாக உள்ளன என்ற விவரம் காட்டும்.

    Advertisement

    டிக்கெட் புக்கிங் செய்யும் போது கேட்கப்படும் தேவையற்ற விவரங்கள் எல்லாம் நீக்கப்பட உள்ளது. அடுத்தடுத்த ஸ்டெப்ஸ்கள் இல்லாமல் சில வினாடிகளில் புக் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒருமுறை புக் செய்தால் அடுத்த முறை தானாகவே அதே டீட்டெயில் நிரம்பும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பயணிகள் தங்கள் விவரங்களை சேமித்துவைத்துக்கொள்ள முடியும்.

    English Summary

    Railway: IRCTC has announced that, thanks to the upgraded app and website, it is now possible to book 1.5 lakh tickets per minute, up from the previous capacity of 32,000. The app has been completely revamped with modern enhancements.