அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்!

  • சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டையில் கனமழைக்கும், செங்கல்பட்டு, கோவை, நாமக்கல், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயில் அடித்தாலும், ஒரு சில பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்த வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement

    4 + 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    "தமிழகத்தின் அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதே போன்று, செங்கல்பட்டு, கோவை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Rain Alert: The Regional Meteorological Centre has forecast rain across 16 districts of Tamil Nadu during the next three hours. Heavy rainfall is likely in Ariyalur, Cuddalore, Mayiladuthurai and Pudukkottai, while moderate rain with thunderstorms may occur in 12 other districts.