சென்னை: தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இரவில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. சென்னை கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகள் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
பகல் நேரங்களில் கடுமையாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சென்னை நகரம் குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்றும் இரவும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வரும் 9 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 10 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 11, 12 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் 10 ஆம் தேதி வரை 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இடையிடையே 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்" என்றூ கூறப்பட்டுள்ளது.இன்று மழை பெய்யும் இடங்கள்
12 ஆம் தேதி வரை மழை
சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்