சென்னை: சென்னையில் இன்றும் இரவில் இடி, மின்னலுடன் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, அண்னாநகர் என பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதே போன்று வானிலை ஆய்வு மையமும், இரவு 10 மணி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, கோவை என 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், ராணிப்பேட்டை, நீலகிரி, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் மற்றும் கோவை, நெல்லை, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் என 22 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.