நீட் போராட்டம்: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இளைஞர்கள் முயற்சி.. குண்டுக்கட்டாக கைது

  • சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இளைஞர்கள் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

    Advertisement

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் இன்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை இளைஞர்கள் முற்றுகையிட முயன்றதால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனுமதியின்றி ஆளுநர் மாளிகைக்குள் நுழைய சில இளைஞர்கள் முயன்றதால் அவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

    Advertisement

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் கோஷம் போட்டனர். இதில் பங்கேற்றவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    Raj Bhavan Siege? Young people are staging a protest in Chennai demanding the cancellation of the NEET exam. A tense situation arose when they attempted to lay siege to the Raj Bhavan in Guindy, Chennai. The protesters raised slogans calling for the cancellation of the exam.