ராஜா ராஜாதான்.. ஆனால் இதெல்லாம் தேவா கொடுத்த ஹிட்! தேனிசை தென்றலின் மாஸ் சாங்ஸ்!

  • சென்னை: 90ஸ் பாடல்கள் பலவற்றை இசைஞானி இளையராஜாதான் கொடுத்திருக்கிறார் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், தேனிசை தென்றல் தேவா கொடுத்த பாடல்கள் பல ஹிட் அடித்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இளையராஜா கொடுத்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

    Advertisement

    கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, மீனம்மா மீனம்மா கண்கள் சொல்லும், ஒரு மணி அடித்தால் கண்ணே உன் நியாபகம், பொட்டு வச்ச பூவே, நலம் நலமறிய ஆவல், மனம் விரும்புதே உன்னை மனம் விரும்புதே, கனவே கலையாதே.. இப்படி பல பாடல்கள் ராஜாவால் இசையமைக்கப்பட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது தேவாவின் தேனிசை ராகங்கள்.

    Advertisement

    தேவாவை பொறுத்தவரை.. அவரது பாடல் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கும். உதாரணமாக.. அவ்வளவு அழகு அவள் என்று சொல்லும்போதே நம் மனதில் காதல் தொடங்கிவிடுகிறது. காதல் கற்பனையை வளர்க்கனுமா? இருக்கவே இருக்கு தேவா பாட்டு.. 'ஒரு மணி அடித்தால் கண்ணே உன் நியாபகம்' பாட்டை கேட்டு பாருங்க. லவ் அப்படியே ஆளை உருக்கும்.

    சரி மனசுக்கு புடிச்ச பொண்ணோட பேசியாச்சு! ஆனா.. காதலை இன்னும் சொல்லல. அதுக்கும் தேவா இருக்காரு! 'உன் பேர் சொல்ல ஆசைதான்' கேட்டு பாருங்க. ஒருவழியாக காதல் கை கூடிவிட்டது. அடுத்து ரொமான்ஸ் போஷனுக்கு போகனும்.. அங்கதான் தலைவன் தேவா தீயா வேலை பார்த்து வைத்திருக்கிறார். 'நிலவை கொண்டு வா.. கட்டிலில் கட்டி வை' பாட்டு கேட்டா ரொமான்ஸ் மடை திறந்த நதி போல பாயும்.

    Advertisement

    ஆனா இதுக்கப்புறம்தான் வாழ்க்கையே இருக்கு. எல்லா காதலும் கைகூடாது இல்லையா! பஞ்சாயத்து கிணறு வாய்கள், சாதி பேசும் பாதி பரிணமித்த மனிதர்கள், மதம் பார்க்கும் மாங்காய்கள்.. காதலை கழுத்தறுப்பதுண்டு. ஆனால் என்ன நடந்தாலும் வாழ வேண்டுமே! காதல் இல்லை என வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட முடியுமா? அப்படி ஒரு மன நிலை இருந்தால்.. 'வாங்குடா 420 பீடா' என்கிற பாடலை கேட்டால் அந்த மனநிலையிலிருந்து அல்லேக்காக வெளியே வந்துவிடலாம். பாட்டில் அவ்வளவு மேஜிக் செய்திருக்கிறார் தேவா.

    காதல் வேணுமா? இருக்கு.. காதல் தோல்வியா அதுக்கும் இருக்கு, வாழ்க்கையே தோல்வியா.. என்கிட்ட வா! என்று சொல்லும் அளவுக்கு தேவாவின் பாடல்கள் கொட்டி கிடக்கின்றன.

    Advertisement

    கொத்தவால் சாவடி லேடி, குன்றத்துல கோயில கட்டி, உதயம் தியேட்டருல, சலோமியா, மீனாட்சி மீனாட்சி, கந்தன் இருக்குமிடம், காத்தடிக்குது காத்தடிக்குது இப்படி தேவாவின் மாஸை சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும், 'வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி' பாடல் தனித்துவமானது. இந்த பாடலை கவிஞர் பொன்னியின் செல்வனுடன் சேர்ந்து தேவா எழுதியிருக்கிறார். தேவா பாடி.. அவரே இசையமைத்தும் இருக்கிறார். இந்த பாடலில் வரும் 'டாவு டாவு டாவுடா.. டாவு இல்லாட்டி டை டா' வரிகள் காதலுக்கான புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். டை(Die) என்பது இறப்பை வலியுறுத்தாமல்.. காதலிக்காமல் இருக்காதே என்பதை வலியுறுத்துவதை போல பாடல் அமைந்திருக்கும்.

    Advertisement

    இவ்வளவையும் செய்த தேவாவை காலம் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டது. இன்று காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 75.

    English Summary

    Many of us tend to believe that the legendary Ilaiyaraaja composed most of the songs from the 90s. In reality, however, 'Thenisai Thendral' Deva delivered numerous hits—songs that we often mistakenly attribute to Ilaiyaraaja.